TamilSaaga

சிங்கப்பூரில் தினம் 18 மணி நேரம் வேலை.. மூத்த மகனாக குடும்பத்தையே சுமந்து.. இன்று “Thambi Magazine” எனும் அசைக்க முடியா ஆலமரமாக வளர்ந்து நிற்கும் தமிழன்!

சிங்கப்பூரில் ‘சாம்’ என்று அழைக்கப்படும் பெரியதம்பி செந்தில்முருகன் தனது வாழ்நாள் முழுவதையும் பத்திரிகைகளுக்காகவே அர்ப்பணித்திருக்கிறார். ஆம்! 47 வயதான பெரியதம்பியின் குடும்பத்தினர், 80 ஆண்டுகளுக்கும் மேலாக ‘Thambi Magazine’ எனும் கடையை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து செந்தில்முருகன் பேசுகையில், “தொடக்க காலத்தில், ‘தம்பி இதழ் அங்காடி’ ஒரு செய்தித்தாள் விநியோக சேவையாக மட்டுமே இருந்தது. மறைந்த எனது தாத்தா, பி கோவிந்தசாமி, 1940 களில் இதைத் தொடங்கி, பிரிட்டிஷ் வீரர்களுக்கு பத்திரிகை வழங்கும் பணியை மேற்கொண்டார். அவர் செய்தித்தாள்களை சேகரிப்பதற்காக செலிகி சாலைக்கு (Selegie Road) சைக்கிளில் செல்வார்.

அதன் பிறகு செந்தில்முருகனின் மறைந்த அவரது தந்தை பெரியதம்பி தலையெடுக்க தொடங்கிய பிறகு தான் பத்திரிக்கைகள் வெளிவரத் தொடங்கின.

சாம் தனது தந்தையை “கராங்” நபர் என்று விவரிக்கிறார். அதாவது ஒரு ஸ்ட்ரிக்ட் தந்தை என்கிறார். தங்கள் கடைக்கு அருகிலுள்ள SAF முகாம்களில் அவரது தந்தை பணியாற்றும் போது, அவர் டைகர் ஹாங்கை என்பவரை சந்தித்தார். அந்த டைகர் யார் தெரியுமா? சிங்கப்பூரின் முன்னோடியான ரெஜிமென்டல் சார்ஜென்ட் மேஜர்களில் (RSMs) ஒரு புகழ்பெற்ற நபர் அவர். முகத்தில் ஒரு முடி இருந்தால் கூட அவர் கேம்ப் உள்ளே எவரையும் அனுமதிக்க மாட்டார். அந்தளவுக்கு அனைவரும் க்ளீன் ஷேவ் செய்திருக்க வேண்டும். என் தந்தை அவரது இறுதி நாட்களில் கூட அவரது SAF-அங்கீகரிக்கப்பட்ட சீர்ப்படுத்தும் தரநிலைகளை கடைபிடித்தார்.

மேலும் படிக்க – உலகின் ‘Most Powerful’ பாஸ்போர்ட்.. மீண்டும் நிரூபித்த சிங்கப்பூர் – 192 நாடுகளுக்கு தன் சிறகை விரிக்கும் “சிங்கப்பூர் பாஸ்போர்ட்”

தொடக்கத்தில் எனக்கு இந்த பத்திரிக்கை தொழிலில் விருப்பம் இல்லை. ஆகையால் marine engineering-ல் ஒரு programme படிக்க சேர்ந்துவிட்டேன். ஆனால், அந்த விதி வலியது. அது வேறு ஒரு திட்டத்தை வைத்திருந்தது.

“என் அப்பாவின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால், நான் படிப்பை கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆரம்பத்தில், எனக்கு கடையில் வேலை செய்ய பிடிக்கவில்லை. இது நான் விரும்பியது அல்ல, ஆனால் எப்படியோ அது என் இரத்தத்தில் உள்ளது.

மூத்த மகனான செந்தில் முருகன் தான் குடும்பத்தின் ஒட்டுமொத்த பாரத்தையும் தன் தோளில் சுமக்க நேரிட்டது. நாட்கள் செல்ல செல்ல தனது magazine கடை தான் தனது முதல் குழந்தை என்று கூறும் அளவுக்கு தொழிலில் ஒன்றிப்போனார். magazine கடையை தன் மூச்சாக சுவாசிக்கத் தொடங்கினார்.

இந்த உழைப்பின் உச்சமாக, கடையை 7,000 விதமான பத்திரிகைகள் அலங்கரித்தன. அந்த நாட்களில், செந்தில் முருகன் அதிகாலை 4 மணிக்குத் கடையை திறந்து, இரவு 11 மணிக்கு தான் மூடுவார். கனவிலும் கூட அவருக்கு பத்திரிகைகளே தோன்றின. தினம் பதினெட்டு மணி நேர வேலை செந்தில் முருகனின் வாழ்க்கை முறையாக மாறியது.

என் மகன் என்னிடம் எப்போதும், “போப்பா.. நீயும் உன் கடையும்.. எப்போ பார்த்தாலும் உனக்கு கடை கடை கடை தான்” என்பான். நான் அவர்களை வெளியே அழைத்துச் செல்வது அரிது. அதற்கு நான் அவர்களிடம், “நீங்கள் எங்கு செல்ல விரும்பினாலும், உங்கள் தாயுடன் செல்லலாம். ஆனால் என்னைப் பார்க்க வேண்டும் என்றால் கடைக்கு வரலாம். உனக்கு என்ன வேண்டும்? நாம் தான் பத்திரிகைகளின் பிரபஞ்சம்” என்பேன்.

எனது கடை கிராமத்துச் சூழல் போன்று இருக்கும். அப்போது இது ஒரு பெரிய குடையின் கீழ் அமைந்திருந்தது. மக்கள் தங்கள் நண்பர்களுக்காக அங்கே காத்திருந்தனர். அது நண்பர்கள் ஒன்று சேரும் இடமாக இருந்தது.

மேலும் படிக்க – “தங்க மனசு”.. சிங்கப்பூரில் உயிரிழந்த ராஜேந்திரன் – “தமிழ் சாகா” மூலம் நிதியுதவி அளித்தவர்கள் பட்டியல்.. கோடி நன்றி சொன்னாலும் ஈடாகாது!

90-களின் இறுதியில், வெப்சைட்டுகள் ஆதிக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. ஆனால், நான் பத்திரிகைகள் வாடிக்கையாளர்கள் கைகளில் தவழ வேண்டும் என்று எண்ணினேன். அவர்கள் நேரடியாக கடைக்கு வந்து, பொறுமையாக தங்களுக்கு பிடித்த பத்திரிக்கையை தேடி ஆராய்ந்து எடுத்துச் செல்ல வேண்டும் என்று விரும்பினேன். எவ்வளவு இடர்பாடுகள் வந்தாலும், எங்களின் ‘Thambi Magazine Store’ அதன் இருப்பை இழக்கவில்லை.

7,000 விதமான இதழ்கள் என்றால் கற்பனை செய்து பாருங்கள். எங்களிடம் இல்லாத பத்திரிகைகளே கிடையாது. உணவு தொடங்கி வானியல் வரை நீங்கள் எந்த துறை சார்ந்த பத்திரிகையை தேடி வந்தாலும் இங்கு பெறலாம். நிலவைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா? எங்களிடம் வாருங்கள். டாய்லெட் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா? அதற்கும் எங்களிடம் வாருங்கள்.

எனது பழைய வகுப்பு தோழர்களை நான் சந்தித்தேன். அவர்களில் பலர் உயர் பதவிகளில் இருக்கிறார்கள், அவர்கள் அனைவரும் நன்றாக இருக்கிறார்கள். அவர்களில் சிலர் முன்கூட்டியே ஓய்வு பெற்றுள்ளனர். ஆனால் என்னைப் பொறுத்தவரை எந்த வருத்தமும் இல்லை. இந்த கடை எனக்கு முதல் குழந்தை. நான் அதை அழகுபடுத்தினேன். நான் இன்னும் அதில் இருக்கிறேன். என்றும் அதில் இருப்பேன்” என்று தெரிவித்தார்.

Content and Image Source: CNA Singapore

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts