TamilSaaga

Exclusive: சிங்கப்பூர் அப்பாக்கள் இழக்கும் பெரும் சொத்து “தன் குழந்தைகளின் பாசம்”…எதிரிக்குக் கூட இந்த நிலை வரக்கூடாது என்று குமுறும் தந்தைகள் ஏராளம்!!

சிங்கப்பூரில் வேலை செய்யும் பெரும்பாலான ஆண்களுக்கு லீவு என்பது பெரிய வரப்பிரசாதம். அரபு நாடுகளில் கூட வருடத்திற்கு ஒரு முறை எளிதாக லீவு கிடைக்கிறது. ஆனால் சிங்கப்பூரை பொறுத்தவரை வருடத்திற்கு ஒரு முறை லீவு கிடைப்பது என்பது மிகவும் அரிது.

அதுவும் ஒரு ஒர்க் பெர்மிட்டில் வேலை செய்பவர்கள் என்றால் இரண்டு வருடம் ஒருமுறை மட்டுமே சொந்த ஊருக்கு வர முடியும். சில கம்பெனிகளில், லீவு கூட கொடுக்காமல் பாசை கட் செய்யும் முதலாளிகள் உண்டு.

அதற்கு பயந்து கொண்டே, எப்படியாவது பல்லை கடித்துக் கொண்டு கம்பெனி லீவு கொடுக்கும் பொழுது காத்திருந்து தாய் நாடு வருபவர்கள் ஏராளம். அப்படி இரண்டு வருடத்திற்கு ஒருமுறை வீட்டிற்கு வரும் பொழுது சிங்கப்பூர் அப்பாக்கள் இழக்கும் பெரும் விஷயம் குழந்தைகளின் பாசம்.

இரண்டு வருடத்திற்கு பிறகு அப்பாவினை பார்ப்பதால், சில குழந்தைகள் அருகில் கூட வருவதற்கு ஒரு வாரம் ஆகும். அப்படியே மெதுவாக வந்தாலும் அப்பாக்களுடன் எப்படி பழகுவது என்பதற்கே இன்னும் ஒரு வாரம் போய்விடும்.

ஆக மொத்தம் பிள்ளைகளுடன், சகஜமாக பழகுவதற்கு 15 நாட்கள் வேண்டும். மீதி 15 நாட்களில் அவர்களுடன் சுற்றுலா செல்ல வேண்டும், அவர்களுக்கு வேண்டியது வாங்கி கொடுக்க வேண்டும் எனும் பொழுது 15 நாட்கள் என்பது கடகடவெ என உருண்டோடி போகும்.

குழந்தை நன்றாக அப்பாவிடம் பாசத்தை காட்டும் பொழுது, லீவு முடித்து திரும்பவும் சிங்கப்பூர் செல்ல வேண்டிய நாள் வந்துவிடும். திரும்பவும் தன் பிஞ்சு குழந்தையை தொகுத்துப் போவதற்கு, தந்தை இரண்டு வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

இந்த வாழ்க்கை எதிரிக்குக் கூட வரக்கூடாது என்று மனதிற்குள் புலம்பும் தந்தைகள் ஏராளம். குடும்பத்திற்காக, குழந்தை பாசத்தினை ஒதுக்கி வைத்துவிட்டு, வீடியோ காலில் மட்டும் குழந்தைகளின் முகத்தை பார்க்கும் தந்தைகள் உண்மையில் தியாகத்தின் மறு உருவம்.

Related posts