TamilSaaga

சிங்கையில் வேலை செய்து Tired ஆகிடிட்டீங்களா… உங்க விடுமுறை நாளை இப்படி என்சாய் செய்யுங்க… மிஸ் பண்ணவே கூடாது… வாவ் சொல்ல வைக்கும் இடங்கள்!

சிங்கப்பூரில் வேலை செய்ய வரும் ஊழியர்களும், சுற்றி பார்க்க வரும் பயணிகளும் கூட இங்கு இருக்கும் கட்டடங்களையும், சுற்றி இருக்கும் பிரமிப்பினையும் பார்த்து வாய் பிளப்பது என்னவோ உண்மை தான். அந்த வகையில் நீங்களும் ஒருவராக இருந்தால் நீங்கள் இன்னமும் வாவ் சொல்ல வைக்க சிங்கப்பூரில் இன்னும் சூப்பர் இடங்கள் இருக்கிறது. அந்த லிஸ்ட்டினை தெரிந்து கொண்டு ஒரு ட்ரிப்பினை போட்டுட்டு வந்துடுங்களே!

”சிங்கப்பூர் யுனிவர்சல் ஸ்டுடியோஸ் ”

தென்கிழக்கு ஆசியாவில் இடம்பெற்று இருக்கும் ஒரே யூனிவர்சல் ஸ்டுடியோ சிங்கப்பூரில் தான் இடம்பெற்று இருக்கிறது. இந்த தீம் பார்க்கினை சினிமாவில் இருக்கும் பிரபல இடங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. அட்ரினலின்-பம்ப்பிங் ரைடுகள் இங்கு மிகவும் பிரபலம். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை இங்கு சுற்றிப்பார்க்க நிறைய இடங்கள் அமைந்துள்ளது. கடலில் டைவ் அடிக்கவும் இடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தினை சுற்றி பார்க்க ஒருநாளைக்கு 13 முதல் 59 வயதுள்ள பெரியவர்களுக்கு 87 சிங்கப்பூர் டாலரும், 4 முதல் 12 வயது குழந்தைகளுக்கு 65 சிங்கப்பூர் டாலரும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இதையும் படிங்க: முதன்முறையாக பிக்பாஸில் பங்கேற்கும் சிங்கப்பூர் பெண்.. ஆரியை மிஞ்சும் நேர்மை – டைட்டில் ஜெயித்து சிங்கையை பெருமைப்பட வைக்கப்போகும் “பொக்கிஷம்”!

”மெரினா பே சாண்ட்ஸ் ஸ்கைபார்க் ”

சிங்கப்பூர் என்றாலே அதன் அடையாளங்களின் ஒன்றாக இருப்பது தான் மெரினா பே சாண்ட்ஸ் ஸ்கைபார்க். இந்த பகுதி விரிகுடா பகுதியின் மையப்பகுதியில் 56 மாடிகள் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரை ஒரே இடத்தில் இருந்து ரசிக்க ஏற்ற இடம் இது தான். மெர்லியன் மற்றும் ஸ்பெக்ட்ராவின் மாலைக் காட்சியின் காண முடியும். இரவு நேர காட்சிகள் கண்டிப்பாக உங்களுக்கு விருந்தாகவே அமையும். இந்த இடத்தினை சுற்றி பார்க்க சிங்கப்பூர் மக்களுக்கு 500 சிங்கப்பூர் டாலர் வசூலிக்கப்படுகிறது. ஆனால் சுற்றுலா பயணிகளுக்கு இது முற்றிலும் இலவசம் தான். இதற்கு உங்களின் பாஸ்போர்ட்டினை கையில் வைத்திருக்க வேண்டும்.

”Gardens by the Bay”

சிங்கப்பூர் எப்போதுமே பசுமைக்கு பெயர் போனது என்பதற்கு சான்றாக நிற்பது தான் இந்த Gardens by the Bay. இது ஒரு தேசிய தோட்டம். முற்றிலும் புதுமையான கலையை பயன்படுத்தி இந்த தோட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு தாவரங்களைப் பற்றி சொல்லி தரப்படுகிறது. ஒரே கூரையின் கீழ் பல வகையான காலநிலையில் வாழும் செடிகளை காண முடியும். இந்த தோட்டத்தினை சுற்றி பார்க்க கட்டணம் எதுவுமே கிடையாது. முற்றிலும் இலவசம் தான்.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் முதன் முதலில் வந்திறங்கிய “பெரியார்”.. புது Rolls-Royce கார் வாங்கி அழைத்துச் சென்ற “பெரிய பழுவேட்டரையர்” சரத்குமாரின் தாத்தா – வரலாறு!

”மேடம் துஸாட்ஸ்”

இந்த அருங்காட்சியகத்தினை பற்றி தெரியாதவர்கள் என்று யாருமே இல்லை. உலகின் பிரபலமானவர்களின் தத்ரூபமான சிலையை கொண்ட அருங்காட்சியகம் தான். அந்த சிறப்பான இடம் சிங்கையிலும் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 2014ல் இந்த அருங்காட்சியகம் திறக்கப்பட்டது. இங்கு சுற்றி பார்க்க உலகில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பார்வையாளர்களாக வந்தனர். விஆர் ரேசிங் மற்றும் அல்டிமேட் பிலிம் ஸ்டார், மார்வெல் யுனிவர்ஸ் 4டி மற்றும் சிங்கப்பூரின் படங்கள் என எக்கசக்கமான அனுபவத்தினை பெற நீங்கள் இங்கு விசிட் அடிக்கலாம். டிக்கெட் கட்டணம் 31 சிங்கப்பூர் டாலரில் இருந்து தொடங்குகிறது. அதிகபட்சமாக 75 சிங்கப்பூர் டாலர் வரை பேக்கேஜ் இருக்கிறது.

”நைட் சஃபாரி ”

உலகில் இருக்கும் எல்லா சரணாலயத்திலுமே மக்கள் பார்வை நேரம் காலையில் தொடங்கி மாலையில் முடிந்து விடும். ஆனால் சிங்கப்பூரில் இருக்கும் இந்த நைட் சஃபாரியில் உங்களால் வனவிலங்குகளை இரவில் கூட காண முடியும். இங்கு உலகின் 6 புவியியல் பகுதிகளுக்கு காண முடியும். ஆசிய யானைகள், வெள்ளை ஆப்பிரிக்க சிங்கங்கள் மற்றும் நைல் நீர்யானை ஆகியவற்றை இங்கே காணலாம். பெரியவர்களுக்கு 55 சிங்கப்பூர் டாலரும், 3 முதல் 12 வயது குழந்தைகளுக்கு 38 சிங்கப்பூர் டாலரும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 60 வயதுக்கு மேல் சிங்கை நாட்டினர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். அவர்களுக்கு 20 சிங்கப்பூர் டாலர் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts