TamilSaaga

சிங்கப்பூரில் செயல்பட்டு வந்த Zipster செயலி இனி இயங்காது – காரணம் என்ன?

சிங்கப்பூரில் கடந்த 2019 ஆம் ஆண்டு SMRT உதவியுடன் உருவாக்கப்பட்டது இந்த Zipster செயலி. மாதாந்திர கட்டண அடிப்படையில் இரயில்கள் மற்றும் பேருந்துங்களில் பல்வேறு பயணங்களை வழங்க இந்த செயலி மற்றும் அதன் நிறுவனம் மூலம் திட்டமிடப்பட்டு இருந்தது. கார் மற்றும் சைக்கிள்களில் ஷேர் செய்து பயணிக்கும் சேவைகளில் பல்வேறு தள்ளுபடி வழங்கிடவும் திட்டமிட்டன.

தற்போது இந்த செயலியை உருவாக்கிய MobilityX நிறுவனத்தின் வாய்ப்புகள், சந்தை முன்னேற்றம் ஆகியன கருத்தில் கொண்டு இதன் பங்குதாரர்கள் முதலீடு செய்வதில் இருந்து விலகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முக்கியமாக போக்குவரத்து சார்ந்த விடயங்களை ஒரே இணைய தளத்தில் கொண்டு வரவதற்காக உருவாக்கப்பட்ட இந்த செயலியானது இரண்டு ஆண்டு கூட முழுதாய் நிறையாத நிலையில் மூடப்பட்டது. இதனை உருவாக்கிய MobilityX நிறுவனமும் மூடப்பட்டது.

Related posts