கடந்த 2020ம் ஆண்டில் சிங்கப்பூர் மிருகக்காட்சிசாலையின் காண்டாமிருக வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்ததாக குற்றம் சாட்டப்பட்ட இளைஞருக்கு தற்போது தவளையை கொன்றதற்காக மற்றொரு குற்றச்சாட்டு அவர் மேல் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வைரலான ஒரு டிக்டாக் வீடியோவின் பின்னணியில் இருந்த ரால்ஃப் வீ யி காய் என்ற 19 வயது இளைஞர் தேவையற்ற வேதனையையும், துன்பத்தையும் தவளைக்கு ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டார்.
அந்த நபர் அந்த தவளையை ஒரு ஃபுஸ்பால் மேஜையில் வைத்து துன்புறுத்தியாக கூறப்படுகிறது. பின்னர் அந்த தவளை காயமடைந்த நிலையில் சிறிது நேரத்தில் இறந்தது. இந்த குற்றச்சாட்டு கடந்த 2020ம் ஆண்டு கிறிஸ்துமஸ் காலத்தில் வைரலாக இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. அந்த காணொளியில் இரண்டு இளைஞர்கள் அவர்கள் ஈடுபடும் கொடுரணமான செயல்களை படம்பிடித்து பதிவேற்றம் செய்துள்ளனர்.
மதர்ஷிப்பிடம் பேசிய ஒரு வாலிபர் இந்த தவளைகள் மற்றொரு நண்பருக்கு பரிசாக வாங்கப்பட்டதாகவும், அவர்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக சென்டோசா இல்லத்தில் கூடியதாகவும் கூறினார். அவர்கள் குடியிருப்புக்கு வெளியே இருந்த சில மீன்களுக்கு அந்த தவளைகளை உணவாக்கு முன் அவர்கள் அந்த தவளைகளை கொல்ல விரும்பியதாக தெரிகின்றது. அந்த மாணவர்கள் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவில் இளைஞர்கள் இந்த தவளைகள் அடங்கிய பெட்டியை தரையில் வீசுவது தெரிகின்றது.
காண்டாமிருக கண்காட்சியில் குற்றவியல் அத்துமீறலுக்கான குற்றச்சாட்டு, மற்றும் காழ்ப்புணர்ச்சியின் தொடர்பில்லாத மூன்று குற்றச்சாட்டுகள் மற்றும் தவளைக்கு தேவையற்ற வலியையும் துன்பத்தையும் ஏற்படுத்தும் சமீபத்திய குற்றச்சாட்டு ஆகியவை இதில் அடங்கும். கடைசி குற்றச்சாட்டில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், 1.5 ஆண்டுகள் சிறை அல்லது 15,000 வெள்ளி வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.