சிங்கப்பூரின் முக்கிய ஆவணமாக இருக்கும் security bond குறித்து நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
சிங்கப்பூரின் விதியை மீறினால் அரசாங்கத்துக்கு செலுத்த வேண்டியது தான் பிணை உறுதிமொழி பத்திரம் எனக் கூறப்படும் security bond. மலேசியன் இல்லாத தொழிலாளர் இந்த பாண்ட்டை கண்டிப்பாக எடுக்க வேண்டும். s-pass மற்றும் e-passல் இருப்பவர்களுக்கு இது தேவைப்படாது. வொர்க் பெர்மிட்டில் இருப்பவர்கள் மட்டுமே எடுக்க வேண்டும்.
$5000 சிங்கப்பூர் டாலர் கொடுத்து சிங்கப்பூர் வங்கி அல்லது இன்சூரன்ஸ் கம்பெனியில் இதை வாங்க வேண்டும். ஆனால் இது ஊழியர்கள் பணி செய்யும் நிறுவனத்தில் இருந்து தான் எடுக்கப்படும். வேலைக்கு செல்வோரிடத்தில் எந்தவித தொகையும் கேட்கப்படக் கூடாது.
சிங்கப்பூர் வரும் ஊழியர்கள் கையில் security bond கண்டிப்பாக இருக்க வேண்டும். IP வந்தவுடன் கம்பெனி தரப்பில் security bond வரும் தேதியை குறித்து கேட்டுக்கொண்டு டிக்கெட் போடுங்கள். MOM ஊழியர்களுக்கு இந்த பாண்ட் மூன்று நாட்களுக்கு முன்னரே போக வேண்டும் எனக் கூறுகிறது. இருந்தும், பெரும்பாலான கம்பெனிகள் நீங்கள் கிளம்பும் கடைசி நாளில் தான் security bondஐ உங்களுக்கு கிடைக்க செய்வார்கள்.
உங்களுடைய வொர்க் பெர்மிட் கேன்சல் செய்யப்பட்டு நீங்க நாடு திரும்பினாலோ, சிங்கப்பூர் நாட்டின் எந்த சட்டத்தினையும் நீங்கள் மீறாமல் இருந்தாலோ இந்த பாண்ட் நடைமுறையில் இருந்து ஒரே வாரத்தில் நீங்கள் வெளியேறி விடலாம்.
ஊழியர்களுக்கு நிறுவனம் சரியாக சம்பளம் கொடுக்காமல் இருந்தாலோ, வொர்க் பெர்மிட் முடிந்தும் ஊழியர்கள் சிங்கப்பூரில் இருந்து வெளியேற்ற நிறுவனம் தவறினாலோ, நாட்டின் எந்த விதிகளையாவது நீங்கள் மீறினாலோ, நீங்கள் கம்பெனியில் இருந்து காணாமல் போனாலோ இந்த இந்த security bondஐ MOM பறிமுதல் செய்து விடும்.
இந்த security bond s-pass மற்றும் e-passக்கு கிடையாது. வொர்க் பெர்மிட்டில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது. s-passல் வரும் ஊழியர்களுக்கு மெடிக்கல் இன்சுரன்ஸ் மட்டுமே நிறுவனத்தால் எடுக்கப்பட வேண்டும்.