சிங்கப்பூரில் பெருந்தொற்று நோயால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக ஒரு இளைஞர் வேடிக்கையாக ஒரு பொய் உரைத்துள்ளார். அதன் பிறகு சிங்கப்பூர் தேசிய சேவையில் (NS) பணியாற்றி வரும் ஒருவர் இந்த பொய் உரைத்தவரோடு நெருங்கிய தொடர்பில் இருந்த இவை உரைத்த பொய்யினை நம்பி Pulau Tekong-ல் இருந்து அவரது வீட்டிற்கு அனுப்பப்பட்டார். மேலும் அந்த தனிமைப்படுத்தப்பட்ட நபர் இருந்த ராணுவ வீரர்கள் இருப்பிடமும் கிருமி நீக்கம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதனால் அங்கு பல குளறுபடிகளும் ஏற்பட்டது.
இதையும் படியுங்கள் : புலம்பெயர்ந்த தொழிலாளி பரிதாப பலி
இந்நிலையில் பொது ஒழுங்கு மற்றும் தொல்லைகள் சட்டத்தின் கீழ் தவறான செய்தியைத் தெரிவித்ததாக நீதிமன்றதில் கடந்த மாதம் தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட சியூவுக்கு, இப்போது 19 வயது. இந்நிலையில் இன்று செவ்வாய்கிழமை (டிசம்பர் 14) அவருக்கு ஒன்பது மாதங்கள் Probation விதிக்கப்பட்டுள்ளது. இந்த Probationனில் ஒரு பகுதியாக, அந்த சிங்கப்பூர் வாலிபர் தினமும் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை வீட்டுக்குள்ளேயே இருந்து 40 மணிநேரம் சமூக சேவை செய்ய வேண்டும் என்று தீர்ப்பிடப்பட்டுள்ளது. மேலும் அவனது நன்னடத்தையை உறுதி செய்வதற்காக அவனது பெற்றோர் 5,000 வெள்ளி பிணைக்கப்பட்டனர்.
கடந்தமே 23 அன்று அதிகாலை 1 மணியளவில், சியூ தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளில் ஆன்லைனில் கண்டறிந்த நேர்மறை பாலிமரேஸ் சங்கிலி எதிர்வினை சோதனையின் படத்தை வெளியிட்டார். மேலும் அந்த பதிவில் “நண்பர்களே எனக்கு புதிய வகை பெருந்தொற்று பாதித்துள்ளது (Bye)” என்று குறிப்பிட்டிருந்தார். அதோடு நிற்காமல் “ஐசியுவில் இருந்து இப்போது விடைபெறுங்கள் தோழர்களே” என்ற தலைப்புடன் அவர் மருத்துவமனை படுக்கையில் இருக்கும் ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டார்.
Siew அவர் வீட்டில் இருந்தபோது இந்த பதிவைப் பதிவேற்றியிருந்தார், மேலும் அவர் வேறொரு காரணத்திற்காக மருத்துவமனையில் முன்பு இருந்த அந்த புகைப்படத்தையும் அவர் தவறாக பயன்படுத்தினர். பலருக்கு சந்தேகம் வந்த நிலையில் பதிவை வெளியிட்ட 15 நிமிடத்தில் அதை delete செய்துள்ளார். இந்நிலையில் Pulau Tekongல் NS சேவை செய்து கொண்டிருந்த Siewவின் 19 வயது நண்பர், அன்று அதிகாலை சுமார் 4.45 மணியளவில் எழுந்ததும், அவரது நண்பர்கள் வாட்ஸ்அப் குழு chatல் Siew-ன் அந்த பதிவு பற்றி விவாதிப்பதைக் கண்டார்.
அதை கண்ட அவர், தான் அண்மையில் Siew-வை சந்தித்ததால் தனக்கு தொற்று இருக்கலாம் என்று பயந்துள்ளார். மேலும் உடனடியாக அவர் தனது தலைமை அதிகாரிக்கு தெரிவித்தார், அந்த அதிகாரி சற்றும் தாமதிக்காமல் அவருக்கு SWAB சோதனை செய்து அவரை வீட்டிற்கு அனுப்பினார். அனைத்தும் முடிந்து காலை 11.15 மணியளவில் பயந்து வீட்டுக்கு வந்தபிறகு தான், அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி விளையாட்டாக செய்தது என்று தெரியவந்தது.