சிங்கப்பூரில் 19 மற்றும் 27 வயதிற்குட்பட்ட ஆறு ஆண்கள், யிஷுன் தெரு 11ல் கலவரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டதாக சிங்கப்பூர் போலீஸ் படை இன்று ஆகஸ்ட் 10 அன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் 7ம் தேதி நள்ளிரவு சுமார் 12:20 மணியளவில், யிஷுன் தெரு 11ல் ஒரு பெரிய குழுவினரை உள்ளடக்கிய ஒரு பரபரப்பு தொடர்பாக காவல்துறைக்கு உதவி வேண்டி அழைப்பு வந்தது.
சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அங்கு வந்தவுடன், சம்பவ இடத்தில் காயமடைந்து இருந்த 26 வயதான வாலிபர் ஒருவரை உடனடியாக மருத்துவமனைக்குக் அழைத்துச்சென்றனர். இதனை தொடர்ந்து போலீசார் தங்களது விசாரணையை தொடங்கினர். உட்லேண்ட்ஸ் போலீஸ் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் ஆறு பேரை கண்டறிந்தனர்.
பின்னர் அவர்கள் கலவர வழக்கில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்டு பிறகு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். கலவரத்தில் ஈடுபட்டதாக குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிகள் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் தடியடிக்கு உட்படுத்தப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
குற்றவாளிகளுக்கு ஆறு மாதங்கள் வரை சிறை தண்டனை, அல்லது 10,000 வெள்ளி வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.