சிங்கப்பூரில் கடந்த ஒன்பது மாதங்களில் குறைந்தபட்சம் 10 யிஷுன் குடியிருப்புகளில் இருந்து சிறிய உருளை போன்ற உலோக பந்துகளால் தங்கள் குடியிருப்புகள் தாக்கப்பட்டதாக புகார்கள் பெறப்பட்டுள்ளன. மர்ம நபர்கள் எரியும் இந்த உலோக பந்துகளால் தங்கள் கண்ணாடி கதவுகள் மற்றும் ஜன்னல்கள் சேதமடைந்தன என்றும். பாதிக்கப்பட்ட ஒருவர் அளித்த தகவலின்படி இதனால் ஏற்பட்ட சேதத்தினை சரிசெய்ய சுமார் S$900 செலவாகும் என்றும் கூறப்படுகிறது.
சிங்கப்பூர் போலீசார் இந்த விஷயத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் ஷின் மின் டெய்லி நியூஸ் அளித்த தகவலின்படி, அடோரா கிரீன், யிஷுன் அவென்யூ 11ன் HDB பிளாக்குகள் 347A மற்றும் 347Bன் 8 முதல் 10 வது மாடிகளில் தான் தாக்கப்பட்ட குடியிருப்புகள் முக்கியமாக அமைந்துள்ளன என்று கூறியுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் வாக்கில், மற்ற அண்டை வீட்டாரிடமிருந்து இந்த சம்பவத்தை பற்றி முதன்முதலில் கேள்விப்பட்டதாக ஷின் மினிடம் ஒரு குடியிருப்பாளர் கூறினார்.
இந்தச் செய்தியை அவர் கேட்ட மறுநாள், அவருடைய வீட்டின் மாஸ்டர் Bedroom கண்ணாடி ஜன்னல் மூன்று முறை அந்த உலோக பந்துகளால் தாக்கப்பட்டுள்ளது. அந்த உலோக பந்துகள் விட்டம் சுமார் அரை சென்டிமீட்டர் இருக்கும் என்றும். ஆனால் பந்தின் தாக்கம் மூன்று சென்டிமீட்டர் நீளத்திற்கு கண்ணாடியில் விரிசல்களை ஏற்படுத்தியதாகவும் அவர் கூறினார். தனது வீடு தாக்கப்பட்ட உடனே அந்த பெண்மணி போலீசை அழைத்துள்ளார். போலீசாரும் வீட்டிற்கு வந்து சோதனையிட்டனர், ஆனால் உலோக பந்து எங்கிருந்து சுடப்பட்டன என்பதை அடையாளம் காண முடியவில்லை.
மேலும் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து இதேபோன்ற பிரச்னையை அருகில் உள்ள ஒன்பது குடும்பங்களும் அனுபவித்துள்ளது என்றும் கூறினார். மேலும் இந்த மர்மமான நிகழ்வில் வினோதமாக, அனைத்து சம்பவங்களும் பள்ளி விடுமுறை நாட்களில் (ஜூன், செப்டம்பர் மற்றும் டிசம்பர் விடுமுறை) நடந்ததாக அவர் கூறினார். இதனால் குடியிருப்பாளர்கள் தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து கவலைப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தில் 7 வயது சிறுவன் ஒருவன் பாதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
இது மிகப்பெரிய பிரச்சனையாக மாறும்முன் யார் இந்த வேலையை செய்கின்றனர் என்று கண்டறிய போலீசார் முயற்சி செய்து வருகின்றனர். விரைவில் அந்த கருப்பு ஆடுகள் சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.