சிங்கப்பூரில் தற்போது பரவும் கோவிட்-19 வைரஸின் துணை கிருமியான XBB வகை வைரஸின் தாக்கம் வரும் நவம்பர் மாதம் நடுப்பகுதியில் உச்சத்தைத் தொடும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யே குங் இன்று சனிக்கிழமை (அக். 15) தெரிவித்துள்ளார்.
மேலும், “இது வைரஸ் குறைந்த காலம் பரவக்கூடிய அதேசமயம் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் அலையாக இருக்கலாம். அப்போது சிங்கப்பூரில் சராசரியாக தினசரி 15,000 பேர் இதனால் பாதிக்கப்படலாம் என்றும் அமைச்சர் ஓங் கூறியுள்ளார். தினசரி வழக்குகள் காணப்படலாம் என்று கூறினார்.
இந்த அக்டோபர் மாதம் 3ம் தேதி முதல் 9ம் தேதி வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரில் 54 சதவிகித நபர்களுக்கு XBB வகை தொற்றே பரவியிருந்தது.
இதனால், சிங்கப்பூரில் உட்புறங்களில் மாஸ்க் அணியும் நடைமுறை மீண்டும் கொண்டுவரப்படலாம் என்று தெரிவித்த அமைச்சர், இந்த XBB வகை துணை வைரஸின் பரவலைப் பொறுத்தே இந்த முடிவு எடுக்கப்படும் என்றும் கூறினார்.
ஆனால், தற்போது எந்த முடிவும் எட்டப்படவில்லை என்றும் அமைச்சர் ஓங் கூறினார்.