சிங்கப்பூரில் தற்போது Omicron பரவல் அதிகம் உள்ள இந்த சமயத்தில் கடந்த ஒரு மாத காலமாக தடைபட்டு இருந்து VTL சேவையை நமது சிங்கப்பூரை அரசு மீட்டுக்கொண்டுள்ளது அனைவரும் அறிந்ததே. ஆனால் முன்பை விட மிகக்குறைந்த அளவிலான VTL Approval மட்டுமே வழங்கப்படும் என்றும் நமது சிங்கப்பூர் அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. Entry Approval மற்றும் VTL Approval ஆகிய இரண்டையும் வெகு சில நபர்களுக்கு மட்டுமே தற்போது சிங்கப்பூர் அரசு வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நமது சிங்கப்பூர் குடியரசு இதுவரை 24 நாடுகளுக்கு விமானப் பயணத்திற்கான VTLகளை நிறுவியுள்ளது. அவை ஆஸ்திரேலியா, புருனே, கம்போடியா, கனடா, டென்மார்க், பிஜி, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, மலேசியா, மாலத்தீவு, நெதர்லாந்து, தென் கொரியா, ஸ்பெயின், இலங்கை, சுவீடன், சுவிட்சர்லாந்து, தாய்லாந்து, துருக்கி, ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா ஆகியவை ஆகும்.
இந்நிலையில் தற்போது Work Permit வைத்திருப்பவர்கள் VTL Approval மூலம் விடுமுறைக்கு ஊருக்கு சென்றுவிட்டு மீண்டும் சிங்கப்பூர் வர முடியுமா? என்ற கேள்வி பலரது மத்தியில் எழுந்துள்ளது. இதற்கு நிச்சயம் முடியும் என்பதே பதிலாக உள்ளது. ஆனால் யாரெல்லாம் மேற்குறிப்பிட்ட அந்த வகையில் பயணம் செய்யமுடியும் என்று பார்த்தால் இரண்டு துறை சார்ந்த பணியாளர்கள் மட்டுமே அந்த வகை VTL Approval மூலம் விடுமுறைக்கு சொந்த ஊர் சென்று திரும்ப முடியும்.
அதாவது Work Permit வைத்துள்ள Service Sector மற்றும் Manufacturing Sectorல் உள்ளவர்கள் தடையின்றி வந்து செல்லலாம். ஆனால் Construction அல்லது Marine Process போன்ற செக்டரில் உள்ளவர்கள் Entry Approval அப்ளை செய்து அது ஏற்றுக்கொள்ளப்பட்டால் மட்டுமே அவர்களால் பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Source : நந்தனா ஏர் ட்ராவல்ஸ், திருச்சி