TamilSaaga

பாஸ்போர்ட் எண்ணை தடுப்பூசி சான்றிதழுடன் இணைக்கலாம் – எளிமையாகும் வெளிநாட்டு பயணம்

மத்திய அரசாங்கத்தின் கோவின் போர்டல் இப்போது பயனர்கள் தங்கள் தடுப்பூசி சான்றிதழ்களை விமான பயணத்தின் போது பயன்படுத்த பாஸ்போர்ட்டுகளுடன் அந்த சான்றிதழை இணைக்க தற்போது வழிவகை செய்துள்ளது. மேலும் மக்கள் தங்களுடைய தடுப்பூசி சான்றிதழில் தங்களுடைய பாஸ்போர்ட் என்னை அப்டேட் செய்துகொள்ளலாம் என்று ஆரோக்யா சேது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் குறிப்பிட்டுள்ளது.

தடுப்பூசி சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட்டில் உள்ள பெயர் ஒரே மாதிரியாக இருப்பதை உறுதிசெய்ய ஒரு முறை பெயர் மாற்றத்தையும் இந்த பயன்பாடு அனுமதிக்கிறது என்பது கூடுதல் சிறப்பு.

இந்த மாத தொடக்கத்தில், கோவிட் -19 தடுப்பூசிக்கான புதிய வழிகாட்டுதல்களை மத்திய அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது. கல்வி, வேலைகள் அல்லது டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கான இந்தியப் பிரிவின் ஒரு பகுதியாக வெளிநாடுகளுக்குச் செல்வோர் பாஸ்போர்ட்டுகளுடன் தங்கள் தடுப்பூசி சான்றிதழ்களைப் இணைக்க வேண்டும் வேண்டும் என்று கூறியது.

பல நாடுகளும் தற்போது கொரோனா தடுப்பூசி எடுத்துகொண்டாரை தங்களது நாடுகளுக்குள் வர அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அண்மையில் ஐக்கிய அரபு நாடுகளும் இதுகுறித்த தீர்மானத்தை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts