TamilSaaga

சிங்கப்பூரில் தாயின் “நகம் பராமரிப்புக்கு” மொத்தம் 80,000 வெள்ளி பில் : அதிர்ந்துபோன மகன் – Nail Palace மீது புகார்

Complete News Source mothership.sg

சிங்கப்பூரில் ஒரு பெண் கடந்த 2019ம் ஆண்டு முதல் “Nail Palace” என்ற நிறுவனத்திற்கு, தனக்கு “நக பராமரிப்பு” சேவைகள் வழங்கியதற்காக மட்டும் சுமார் S$80,000 செலுத்தியுள்ளார். மேலும் ஒருமுறை அவர் அந்த நிறுவனத்திற்கு சென்றபோது S$11,000க்கும் அதிகமான பில் தொகையுடன் அவர் அங்கிருந்து வெளியேறியுள்ளார். கடந்த 2002ல் திறக்கப்பட்டது தான் இந்த “Nail Palace”, தற்போது 26 விற்பனை நிலையங்களை கொண்டுள்ளது இந்த Nail சலூன் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள் : Hexacon, TONG SHNG, Enova உள்ளிட்ட சிங்கப்பூரின் முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு

அவற்றில் பல ஜூரோங் பாயின்ட், AMK Hub மற்றும் நார்த்பாயிண்ட் சிட்டி போன்ற முக்கிய மால்களில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அந்த “Nail Palace” என்ற நிறுவனத்தில் கடந்த 2019ம் ஆண்டு முதல் கிரெடிட் கார்டு கட்டணமாக S$80,000-க்கு மேல் அவரது 67 வயதான தாயார் செலுத்தியுள்ளதை கண்டறிந்த பிறகு, அந்தப் பெண்ணின் மகன் லோஹ் பிரபல “மதர்ஷிப்” செய்தி நிறுவனத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் “Nail Palace” வசூலிக்கும் அதிக விலையை அவரால் எப்படி யதார்த்தமாக எடுத்துக்கொள்ள முடிந்தது என்று நான் என் தாயிடம் கேட்டேன் என்றார் அவர்.

அதற்கு அவருடைய தாய் அளித்த பதில் அவரை திடுக்கிட வைத்துள்ளது, தான் அந்த பேக்கேஜில் கையொப்பமிடவில்லை என்றால், கடையில் உள்ள ஊழியர்கள் என்னை வெளியேற அனுமதிக்க மாட்டார்கள் என்று தன்னிடம் கூறியதாக அந்த தாய் தன்னிடம் கூறியதாக லோ கூறினார். மேலும் லோவின் தாயார், தன்னிடம் இதை வாங்குவதற்கு வசதி இல்லை என்று கூறியபோது, அந்த நிறுவன ஊழியர்கள் ​​கிரெடிட் கார்டு மூலம் 12 மாத தவணையாக நீங்கள் செலுத்தும்போது இது மலிவானது தான் என்று கூறியுள்ளனர். இதுமட்டுமல்லாமல் “அவர்கள் அந்த பெண்மணியை பலமுறை அழைத்து, கடைக்குத் மீண்டும் வருமாறு மிரட்டல் தொனியில் கூறியதாகவும் அவர் கூறினார்.

பெருந்தொற்று சூழலில் கடந்த 2020ம் ஆண்டின் பெரும்பகுதிக்கு Nail Palace மூடப்பட்டபோதும், லோஹ் தனது தாயார் அதிக பேக்கேஜ்களை வாங்குவதற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக கூறினார். நிதித் துறையில் பணிபுரியும் அவரது தாயார், தொற்றுநோய்க்கு முன்னும் பின்னும் மூன்று முதல் நான்கு வாரங்களுக்கு ஒருமுறை Nail Palace-க்குச் சென்றதாக லோ மதர்ஷிப்பிடம் கூறினார். Nail Palace சிங்கப்பூரில் நல்ல பிரபலமான நிறுவனம் என்பதாலும், சிங்கப்பூரின் பல முக்கிய இடங்களில் அவர்களுடைய நிறுவனங்கள் இருப்பதால், அவர்கள் நம்பகமானவர்கள் என்றும் எதையும் சந்தேகிக்கவில்லை என்றும் லோ கூறினார்.

தொற்றுநோய்களின் போது அவரது வருமானத்தை பராமரிப்பதில் உள்ள சிரமங்கள் காரணமாக அவரது தாயார் கிரெடிட் கார்டு பில்களை செலுத்த சிரமப்பட்டார், மேலும் சமீபத்தில் அவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. வெறும் நகத்திற்கு இவ்வளவு ஏன் இவ்வளவு செலவு செய்யவேண்டும் என்று நினைத்து அவர் வருத்தப்பட்டதாகவும் லோ கூறினார். மேலும் ஒருமுறை அந்த Nail சலூனுக்கு சென்றபோது 11,000 வெள்ளி பில் அளித்ததாகவும் அவர் தனது ஆதங்கத்தை பதிவு செய்துள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும், Nail Palace அந்த பெண்ணிடம் 12 Nail Mask சேவைக்கு S$2,256, 22 Coffee Spa Mocha என்ற சிகிச்சைகளுக்கு S$3,696 மற்றும் ஒரு செட் Peeling Cream, Dry Foot Cream மற்றும் Metal Foot File-களுக்கு S$888 என வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து லோ போலீஸ் புகாரை பதிவு செய்ய திட்டமிட்டுள்ளார் மற்றும் சிங்கப்பூர் நுகர்வோர் சங்கத்திற்கு (CASE) இந்த விஷயத்தை குறித்து தெரியப்படுத்தியுள்ளார். இதுகுறித்து Mothership நிறுவனம் Nail Palaceஐ அணுகி கேட்டபோது, லோவின் தாயார் ஒரு VIP வாடிக்கையாளர் என்றும் மற்றும் மாதம் ஒருமுறையாவது நெயில் பேலஸுக்கு அவர் அடிக்கடி வருவார் என்றும் கூறியுள்ளார்.

மேலும் தாங்கள் தங்களுடைய வாடிக்கையாளர்களைத் துன்புறுத்துவதில்லை என்றும், மேலும் தங்களுடைய VIP வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் பேக்கேஜ்களில் சேவைகளைப் பயன்படுத்துவதற்கு நியமனங்களைச் செய்வதற்கு முன்னுரிமை அளிப்பதாகக் கூறியது. லோவின் தாயார் தனது அப்பாயின்ட்மென்ட்களைத் திட்டமிடுவதற்காக அத்தகைய அழைப்புகளைப் பெற்றிருப்பார் என்றும் Nail Palace கூறியது. மேலும் அவர்களது அப்பாயிண்ட்மெண்ட்களைத் தவறவிட்ட வாடிக்கையாளர்களும் தங்கள் அப்பாயிண்ட்மெண்ட்களை மீண்டும் திட்டமிடுவதற்கான அழைப்புகளைப் பெறுவார்கள் என்றது Nail Palace.

மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளில், “லோவின் தாய் எந்த அதிகாரப்பூர்வ புகாரையும் தாக்கல் செய்யவில்லை அல்லது எந்த பணத்தையும் திரும்பக் கோரவில்லை” என்று Nail Palace மேலும் கூறியது. இந்நிலையில் CASE எனப்படும் Consumer Association Singapore 2020ல் அழகு சாதனத் துறை குறித்து 408 புகார்களைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் CASEன் அறிக்கைப்படி, ஜனவரி 1, 2017 முதல் ஜூன் 30, 2019 வரை நெயில் பேலஸ் மீது 29 புகார்கள் வந்துள்ளன என்று கூறியது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts