சிங்கப்பூரில் உள்ள ஒருவர், காகங்கள் எவ்வளவு புத்திசாலித்தனம் மற்றும் விசுவாச குணம் கொண்டவை என்பதை நிரூபிக்க, அந்த மனிதனின் தனது HDB பிளாட்டுக்கு வழக்கமான வருகை தரும் ஒரு காக்கையினை அதன் முதுகில் செல்லமாக அவர் வருடிவிடும் ஒரு வீடியோவைப் படம்பிடித்த வெளியிட்டுள்ளார். Singapore Incidents என்ற Facebook பக்கத்தில் தான் இந்த வீடியோ நேற்று ஜனவரி 13 அன்று பதிவிடப்பட்டுள்ளது. வெளியான கொஞ்ச நேரத்திலேயே பலரின் உள்ளத்தை கவர்ந்துள்ளது இந்த காணொளி.
அந்த அதிசய காகத்தை காண இங்கு கிளிக் செய்யுங்கள்
அந்த நபரின் கூற்றுப்படி, அந்த இளம் காகம் கடந்த சில மாதங்களாக மதிய நேரத்தில் அவரை தனது பிளாட்டில் பார்க்க வந்துள்ளது. Justice James என்ற அந்த நபர் வெளியிட்ட பதிவில் “இந்த இளம் காகம் கடந்த சில மாதங்களாக அவ்வப்போது என் வீட்டிற்கு வந்து கொண்டிருக்கிறது. முதலில் அது உண்ண ரொட்டி துண்டுகள், கடலை போன்ற சில உணவுகளை மட்டுமே கொடுத்தேன்”. “பின்னர் அந்த செல்ல காக்கை அடிக்கடி மதியம் என்னைச் சுற்றிவர தொடங்கியது, பின்னர் தனது இயல்பு வாழ்க்கையை நோக்கி சென்றுவிடும்”.
“இந்நிலையில் சமீபத்தில் தான் அந்த காகம் என்னை அதிகமாக நம்பி அதன் முதுகில் நான் என் கைகளால் தேய்க்க அனுமதித்தது. உண்மையில் அந்த காகம் ஒரு பூனையை போல நான் தேய்த்துவிடுவதை ரசித்தது”. “காகங்கள் மிகவும் புத்திசாலி மற்றும் அவை மக்களை அடையாளம் காணும் குணம்கொண்டவை. நீங்கள் அவற்றை மரியாதையுடனும் அன்புடனும் நடத்தினால், அவர்கள் அதையே உங்களுக்குத் திருப்பித் தருவார்கள்” என்றார் அவர்.
“அதே நேரத்தில் Justice James வெளியிட்ட பொறுப்புத் துறப்பில் : இந்தக் காகம் எனது செல்லப் பிராணி அல்ல, அது ஒரு காட்டு காகம், ஆனால் அதனுடன் நான் பல மாதங்களுக்கும் மேலாக பிணைப்பை ஏற்படுத்தினேன். சில காரணங்களால் அது என் மீது ஆர்வம் கொண்டு என்னை தனது நண்பராக கருதுகிறது. அதிலும் குறிப்பாக தினமும் ஒரே நேரத்தில் அது என்னை அடிக்கடி சந்திக்க வருகின்றது” என்றார் James.