TamilSaaga

7 லட்சம் வெள்ளி மதிப்பிலான மின் சிகரெட்டுகள் கடத்தல் – 14 ஆடவர்களுக்கு 2 மாத சிறை

கடந்த சில ஆண்டுகளாக சிங்கப்பூரில் போதை பொருட்களின் புழக்கம் அதிகரித்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. சில தினங்களுக்கு முன்பு பல லட்சம் வெள்ளி மதிப்பிலான போதை பொருட்கள் சிக்கியது நினைவுகூரத்தக்கது.

இந்நிலையில் சிங்கப்பூரில் வரலாறு காணாத விதமாக சுமார் 7 லட்சம் வெள்ளி மதிப்பிலான மின் சிக்ரெட்களையும் அது தொடர்பான பொருட்களையும் போலீசார் கடந்த திங்கள் அன்று பறிமுதல் செய்துள்ளனர்.

கடந்த மாதம் ஏழாம் தேதி கோழிகளை சிங்கப்பூருக்கு வினியோகம் செய்ய 7 மலேசிய லாரிகள் இங்கு வந்தன. மேலும் அந்த வண்டிகளின் இருக்கைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அதே மலேசிய நிறுவனத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர்களும் உதவியாளர்களும் சிங்கப்பூரில் உள்ள ஒரு தனிப்பட்ட மறைவான இடத்திற்கு செல்வதற்காக சுகாதார அறிவியல் ஆணையம் மேற்கொண்ட சோதனையில் தெரியவந்தது.

மொத்தம் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின் சிகரெட்டும் அது தொடர்பான பொருட்களும் தற்போது சுகாதார அறிவியல் ஆணையம் மற்றும் குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையம் கண்டுபிடித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக 14 ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இரண்டு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மின் சிகரெட்டுகளை வைத்திருந்தல், அதை விற்பனை செய்தல், கள்ளத்தனமாக இறக்குமதி செய்தல் உள்ளிட்ட குற்றங்களுக்கு 10,000 வெள்ளி மற்றும் 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts