TamilSaaga

கொரோனா சுய பரிசோதனைக் கருவி – எப்போது பயன்படுத்தலாம் : எப்போது பயன்படுத்தக்கூடாது

சிங்கப்பூர் உள்பட உலகின் பல நாடுகளில் தற்போது சுயமாக கொரோனா பரிசோதனை செய்துகொள்ள Antigen Rapid Test சுய பரிசோதனைக் கருவியை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த கருவியை எப்போது பயன்படுத்தலாம். எப்போது பயன்படுத்த கூடாது என்ற தகவலை சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

எப்போது பயன்படுத்தலாம் :

கொரோனா நோய் தொற்று இல்லை, மேலும் அதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. ஆனால் தொற்று இருக்குமோ என்ற சந்தேகம் உள்ளவர்கள் இந்த சுய பரிசோதனையை செய்துகொள்ளலாம் என்று சுகாதார மேம்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

இந்த சுய பரிசோதனைக் கருவியை எப்போது பயன்படுத்த கூடாது.

பயன்படுத்தும் நபருக்கு உடல்நிலை சரியில்லாதபோது இந்த கருவியை பயன்படுத்த கூடாது.

பரிசோதனை செய்பவருக்கு சளி, காய்ச்சல் அல்லது இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் இந்த கருவியை பயன்படுத்தக்கூடாது. மாறாக உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

பரிசோதனைக்கு 24 மணி நேரத்திற்கு முன்பு மூக்கில் இருந்து ரத்தம் வந்திருந்தால் பயன்படுத்தக்கூடாது.

கடந்த 4 வாரங்களில் மூக்குப்பகுதியில் அறுவைசிகிச்சை செய்தவர்கள் பரிசோதனை செய்யக்கூடாது.

கடந்த 8 வாரங்களில் முகத்தில் அறுவை சிகிச்சை செய்தவர்கள் பரிசோதனை செய்யக்கூடாது..

மேற்குறிப்பிட்ட விஷயங்களுக்கு பொருந்துபவர்கள் கட்டாயம் சுய பரிசோதனை கருவியை பயன்படுத்த கூடாது.

Related posts