சிங்கப்பூர் மனித வள அமைச்சகமானது (MOM), பணியாளர்களின் வேலைவாய்ப்பு கட்டுப்பாடு விதிகள் குறித்த முத்தரப்பு (Tripartite) வழிகாட்டுதல்களை, இந்த ஆண்டின் இரண்டாம் பகுதியில் வெளியிட உத்தேசித்துள்ளதாக மனிதவள அமைச்சர் டான் சீ லெங் கடந்த செவ்வாய்க்கிழமை (பிப். 6) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் ஏற்கனவே கடந்த ஆண்டு சிங்கப்பூர் மனித வள அமைச்சகமானது (MOM), சிங்கப்பூரில் பணிநீக்கம் செய்யப்பட்ட(Retrenched) மற்றும் பிற பணியாளர்களுக்கு புதிய வேலை தேடுவதை கட்டுப்படுத்தும் வேலைக்கான ஒப்பந்தங்களில் உள்ள விதிகளை நியாயமான முறையில் பயன்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்க, தொழிற்சங்கங்கள் மற்றும் employer களுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து மனிதவள அமைச்சர் டான் சீ லெங் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கையில், பொதுவாக தற்போது நடைமுறையில் இருக்கும் வேலை ஒப்பந்த கட்டுப்பாட்டு விதிகள் பணியாளர்கள் தங்கள் வேலையை விட்டுச் சென்ற உடனே மற்றொரு பணியில் சேர்வதைத் தடை செய்வதாக உள்ளதாகவும், அதனை சரி செய்யும் விதமாகவே முத்தரப்பு வழிகாட்டுதல்கள் உருவாக்கப்படுகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் இந்த வழிகாட்டுதல்கள் employer களுக்கு அறிவுறுத்தவும், விதிமுறைகளை சரி செய்யவும் உதவும் என்றும் கூறியுள்ளார். இந்த வழிகாட்டுதல்கள் தற்போது இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் , அவை இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் வெளியிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் அவர் MOM ஒருபோதும் நியாயமற்ற தவறான வேலை ஒப்பந்தங்களை அனுமதிக்காது என்றும் வலியுறுத்திக் கூறியுள்ளார்.
மேலும் அவர், அத்தகைய பணியாளர்களை பணியின் போது அல்லது பணியிலிருந்து வெளியேறிய பிறகு மற்ற தரப்பினருடன் வணிகம் அல்லது பணி செய்வதற்கு கட்டுப்படுத்தும் கட்டுப்பாடு விதிகள் எப்போது ஏற்றுக்கொள்ளப்படும் மற்றும் செயல்படுத்தப்படலாம் என்பதற்கான கொள்கைகளை சிவில் நீதிமன்றங்கள் ஏற்கனவே தெரிவித்துள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து மேலும் அவர், சிங்கப்பூரின் அணுகுமுறையானது பணியாளர்களுக்கு நியாயமான வேலைவாய்ப்பு வழங்குவதிலும் மற்றும் ஆட்குறைப்பு செய்வதிலும் தொழிலாளர்களைப் பாதுகாக்கும் வகையில் சமநிலையாக இருப்பதாக வலியுறுத்தி கூறியுள்ளார்.
இந்த சமநிலையான அமைப்பு இறுதியில் நல்ல வேலை வாய்ப்புகளை உருவாக்கி, பணியாளர்களை சிங்கப்பூரிலேயே தொடர்ந்து தக்கவைப்பதாகவும் , மேலும் தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டாலும், அவர்களுக்கு வேறு நல்ல வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதையும் இது உறுதி செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் செலவுக் குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது employer களுக்குத் தெளிவான வழிகாட்டுதலை உருவாக்க Tripartite கூட்டாளர்களுடன் இணைந்து MOM பணியாற்றுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த வழிகாட்டுதல்கள் அதிகப்படியான மனிதவளம் மற்றும் பொறுப்பான ஆட்குறைப்பை நிர்வகிப்பதற்கான முத்தரப்பு ஆலோசனை அல்லது Tamem இல் உள்ளது என்றும் இது வரவிருக்கும் ஆட்குறைப்பு பற்றி தொழிற்சங்கங்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்க தொழிற்சங்க நிறுவனங்களுக்கு வழிகாட்டுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
Employer கள் இந்த Tamem ன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றாவிட்டால், நியாயமான மற்றும் முற்போக்கான வேலைவாய்ப்பு நடைமுறைகளுக்கான முத்தரப்புக் கூட்டமைப்பு அல்லது MOM ஆலோசனையைக் கடைப்பிடிக்க employer களை வலியுறுத்தும் என்றும் பெரும்பாலான employer கள் இதற்கு ஒத்துழைப்பதாகவும் டாக்டர் டான் கூறினார்.
கூடுதலாக, கட்டாய ஆட்குறைப்பு அறிவிப்புகளுக்குப் பிறகு (MRNs- Mandatory Retrenchment Notifications) பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சரியான நேரத்தில் உதவ முத்தரப்பு கூட்டாளர்களுடன் MOM இணைந்து செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால் ஆட்குறைப்புப் பயிற்சியை மேற்கொண்ட பிறகு MRNகளைச் சமர்ப்பிக்காத தொழிற்சங்க நிறுவனங்களின் வழக்குகள் எதையும் MOM இதுவரை பெற்றதில்லை என்றும் மிக முக்கியமாக, தொழிலாளர்களின் திறமையை மேம்படுத்துதல் மற்றும் மறுசீரமைத்தல் மூலமாக அவர்கள் தொடர்ந்து பணியாற்றிட MOM எப்போதும் உதவுவதாகவும் டாக்டர் டான் தெரிவித்துள்ளார்.