TamilSaaga

ஸ்டால் வைத்திருப்போருக்கு 500 வெள்ளி உதவித்திட்டம் : சிங்கப்பூர் நிதி அமைச்சகம் – முழு விவரம்

சிங்கப்பூரில் இந்த தடைகாலத்தில் வணிகர்கள் மற்றும் சந்தை விற்பனையாளர்களுக்கு ஆதரவளிக்க, அரசாங்கம் சந்தை மற்றும் ஹாக்கர் மைய நிவாரண நிதியை அறிமுகப்படுத்தியது. தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் (NEA) அல்லது NEAவினால் நியமிக்கப்பட்ட ஆபரேட்டர்களால் நிர்வகிக்கப்படும் மையங்களில் உள்ள தனிப்பட்ட ஸ்டால்கள் அனைத்திற்கும் 500 டாலர் ரொக்கம் ஒருமுறை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கூடுதலாக, எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் நிறுவனம் உணவு விநியோக பூஸ்டர் தொகுப்பை மீண்டும் அறிமுகப்படுத்துகிறது. இதனால் வணிகர்களுக்கு ஆன்லைன் உணவு விநியோக தளங்களை பயன்படுத்துவதற்கான செலவுகள் குறையும்.

மேலும் NEAவால் நிர்வகிக்கப்படும் மையங்களில் உள்ள சந்தை மற்றும் ஹாக்கர் ஸ்டால் வைத்திருப்பவர்களுக்கு 1 மாத வாடகை தள்ளுபடி செய்யப்படும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் NEAவால் நிர்வகிக்கப்படும் மையங்களில் உள்ள சந்தை மற்றும் ஹாக்கர் ஸ்டால் வைத்திருப்பவர்களுக்கு டேபிள் சுத்தம்செய்ய 1 மாத மானியமும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து வணிக செலவுகளை குறைக்கும் நோக்கத்தில் உணவு டெலிவரிக்கான பூஸ்டர் பாக்கேஜ்கள் ஜூலை 22ம் தேதி முதல் ஆகஸ்ட் 18ம் தேதி நீடிக்கப்படுகிறது என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related posts