TamilSaaga

சிங்கப்பூர் வருவதில் இந்தியர்களுக்கு நிபந்தனையற்ற அனுமதி ஏன் இல்லை? – CECA உடன்பாடு என்ன சொல்கிறது? – முழு விவரம்

சிங்கப்பூர் மற்றும் இந்தியா இடையேயான விரிவான பொருளியல் ஒத்துழைப்பு உடன்பாட்டில் (CECA – India–Singapore Comprehensive Economic Cooperation Agreement), இந்திய நாட்டின் நிபுணர்கள் எந்த நிபந்தனையும் இல்லாமல் சிங்கப்பூருக்கு வர அனுமதி வழங்கப்படவில்லை.

சிங்கப்பூரில் வசிக்கவும், வேலை செய்யவும் நிரந்தரமாக தங்குவது அல்லது குடியுரிமை பெறுவதில் எவரை அனுமதிக்க வேண்டும் என்று முடிவெடுக்கும் முழு உரிமையும் அரசாங்கத்திடம் உள்ளது” என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் குறிப்பிட்டார்.

இந்நிலையில் சிங்கப்பூர் வருவதில் இந்தியர்களுக்கு நிபந்தனையற்ற அனுமதி ஏன் இல்லை ? இதுகுறித்து CECA உடன்பாடு என்ன சொல்கிறது? என்று தற்போது பார்க்கலாம்.

CECAவை பொறுத்தவரை சிங்கப்பூரின் தொழிலாளர் சந்தையில் இந்திய நாட்டினருக்கு தடையற்ற அனுமதி வழங்கப்படுவதில்லை. இந்தியர்கள் உள்பட பிற நாடுகளை சேர்ந்தவர்களும் சிங்கப்பூரில் பணிபுரிய அனுமதிக்கப்படுவதற்கு முன்னர் நடைமுறையில் உள்ள “பணி பாஸ்” அளவுகோல்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது.

மேலும் CECA கட்டண தடைகள், இரட்டை வரிவிதிப்பு மற்றும் சில ஒழுங்குமுறைகளை நீக்கியுள்ளது. சிங்கப்பூர் மற்றும் இந்தியாவின் நிதி நிறுவனங்களுக்கிடையில் தடையற்ற அணுகல் மற்றும் ஒத்துழைப்பை CECA வழங்குகிறது.

மேலும் இந்த CECA திட்டம் குறித்து இணையத்தில் பரவும் பல வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சிங்கப்பூர் பிரதமர் லீ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்ட பதிவில் இந்தியாவுடனான சிங்கப்பூரின் பொருள் வர்த்தகம் என்பது 80 விழுக்காடு அதிகரித்துள்ளது. மேலும் இந்தியாவில் சிங்கப்பூரின் முதலீடு 50 மடங்கு அதிகரித்துள்ளன. 2019ஆம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் முதலீடு செய்த சிங்கப்பூர் நிறுவனங்களில் 97,000 சிங்கப்பூரர்கள் பணிபுரிகின்றனர்.

மேலும் இந்த திட்டத்தின் மூலம் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் வழியாக, சிங்கப்பூரர்களை விட அதிக வேலைவாய்ப்புகள் வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார். 2005 முதல் 2020 ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் சிங்கப்பூரில் மேல்நிலை வேலை அனுமதி பெற்றவர்கள் 1,12,000 பேர்.

மேலும் உள்ளூரைச் சேர்ந்த நிபுணத்துவத் தொழிலர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள் ஆகியோரின் எண்ணிக்கை – 3,80,000க்கும் மேற்பட்டோர். தடையற்ற வர்த்தக உடன்பாடுகள் வழி, சிங்கப்பூர் நிறுவனங்களின் அனைத்துலகப் போட்டித்தன்மையும், சிங்கப்பூரர்களுக்கான வேலை வாய்ப்புகளும் அதிகரிப்பதாகக் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts