TamilSaaga

இந்த மே மாதம் சிங்கப்பூருக்கு Work Permit-ல் புது IPA-ல் செல்பவரா? என்னென்ன Documents தேவை? ஏஜெண்ட்டுக்கு பணம் கொடுக்கப் போறீங்களா? ப்ளீஸ் வெயிட்!

SINGAPORE: இதோ உழைப்பாளர்கள் தினமான மே.1, 2023 பிறந்துவிட்டது. இன்றைய தினம் சென்ட்டிமெண்ட்டுக்காகவே பலர் சிங்கப்பூரில் வேலைக்கு சேர Flight ஏற தயாராகிக் கொண்டிருப்பார்கள். இன்னும் சிலர், அடுத்தடுத்த நாட்களில் ஃபிளைட் ஏற எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருப்பார்கள்.

அந்த வகையில், இந்த மே மாதத்துக்கு சிங்கப்பூருக்கு workpermit-ல் புது IPA-ல் செல்பவர்கள்.. அதாவது புது In Principal Approval (IPA)-ல் செல்பவர்கள் என்னென்ன ஆவணங்கள் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதை விளக்குகிறது இந்த செய்தி.

சிங்கப்பூருக்கு workpermit-ல் புது IPA-ல் செல்பவர்கள் கொண்டுச் செல்ல வேண்டிய ஆவணங்கள்:

Passport

IPA

Vaccine Certificate

Green Bond

On Board Approval

SG Arrival

சிங்கப்பூருக்கு செல்ல பாஸ்போர்ட் உட்பட இந்த ஆறு ஆவணங்களும் மிக முக்கியம். கவனமாக அனைத்தையும் தயார் செய்து கொண்டு கிளம்புங்கள். அதேசமயம், உங்களது IPA உண்மையானதா, போலியானதா என்பதையும் நீங்களே எப்படி கண்டறிவது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

ஏஜெண்ட் மூலம் உங்களுக்கு IPA கிடைத்தவுடன் அதில் இருக்கும் எண்ணை வைத்து MOM இணையதளத்தில் செக் செய்து பாருங்கள். உங்கள் விசா முறை ஆப்லைனில் அப்ளை செய்திருந்தால் உங்களுக்கு முதல் இரண்டு நாள் எந்தவித தகவலும் காட்டப்படாது. ஆனால் அதை தாண்டியும் தகவல் இல்லை எனக் காட்டினால் கண்டிப்பாக இது போலி தான் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

சில ஏஜெண்ட்கள் போலியான IPA உருவாக்கிக் கொடுத்து பணத்தை வாங்கும் சம்பவம் ஆங்காங்கே அரங்கேறி வருகிறது. நீங்கள் அதில் சிக்காமல் இருக்க வேண்டுமெனில், நீங்கள் தான் இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் உஷாராக இருக்க வேண்டும். IPA-ஐ உறுதி செய்த பிறகு பணத்தை கொடுங்கள்.

https://service2.mom.gov.sg/workpass/enquiry/prelanding என்ற இந்த லிங்கை க்ளிக் செய்து உங்கள் IPA உண்மையானதா என்பதை தெரிந்து கொள்ளுங்கள். ஸோ, எல்லாவற்றையும் முழுமையாக செக் செய்து, பிறகு நாம் மேலே குறிப்பிட்ட ஆவணங்களை தயார் செய்து, டிக்கெட் போட்டு, நல்லபடியாக சிங்கப்பூர் வந்து சேருங்கள். ஆல் தி பெஸ்ட்!

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் பெற எங்களது முகநூல் பக்கத்தை Follow பண்ணுங்க”

Related posts