சிங்கப்பூர் – ஒரு சுத்தமான, ஒழுங்கான, பசுமையான நகர-நாடு. ஆனால், இங்கே சட்டங்கள் ரொம்ப கண்டிப்பு! “தர்ம அடி”னு சொல்றது இங்கே உண்மையாவே நடக்கும் – அது அபராதமா இருக்கலாம், சிறை தண்டனையா இருக்கலாம், இல்லைனா சில சமயம் உடல் தண்டனையா (ராட்டினால் அடி) கூட இருக்கலாம். சிங்கப்பூருக்கு போறவங்க இந்த விஷயங்களை தெரிஞ்சுக்கிட்டு போனா, தலைவலி இல்லாம இருக்கலாம். இப்போ “என்னென்ன” செய்யக்கூடாதுனு பார்ப்போம்:
1. சிங்கப்பூரில் சூயிங்கம் (Chewing Gum) வாங்குவது அல்லது பயன்படுத்துவது முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. 1992-ல் இருந்து இந்த சட்டம் இருக்கு. சூயிங்கத்தை நாட்டுக்குள்ள கொண்டு வர்றதும், விக்கறதும், சாப்பிடறதும் கூடாது.
காரணம்: சூயிங்கம் மென்றுவிட்டு, பொது இடங்களில் உமிழ்வதால் ஏற்படும் அசுத்தத்தை தடுக்க இந்த தடை கொண்டுவரப்பட்டது. ஒரு காலத்தில் ரயில் கதவுகளில் சூயிங்கம் ஒட்டப்பட்டதால் ஏற்பட்ட பிரச்சனைகளை தடுக்க கடுமையான சட்டம் கொண்டுவரப்பட்டது.
தண்டனை: சூயிங்கத்தை இறக்குமதி பண்ணினா முதல் முறை S$10,000 (சுமார் 6 லட்சம் ரூபாய்) வரை அபராதம் + 1 வருஷம் வரை சிறை. மறுபடி பண்ணினா S$20,000 அபராதம் + 2 வருஷம் சிறை.
மருத்துவ காரணங்களுக்காக சூயிங்கம் தேவைப்பட்டால், மருத்துவரின் பரிந்துரை சீட்டுடன் மருந்தகங்களில் மட்டும் வாங்கலாம். நிகோடின் கம் போன்ற மருத்துவ ரீதியான சூயிங்கம்களுக்கு மட்டும் அனுமதி உண்டு. மருத்துவரின் பரிந்துரை இல்லாமல், வேறு எந்த வகையான சூயிங்கத்தையும் சிங்கப்பூரில் வாங்கவோ, பயன்படுத்தவோ முடியாது.
2. பொது இடங்களில் புகை பிடிக்கக் கூடாது: பேருந்து நிறுத்தங்கள், பூங்காக்கள், வணிக வளாகங்கள் மற்றும் உணவகங்கள் போன்ற பொது இடங்களில் புகை பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. “No Smoking” பலகை இல்லாவிட்டாலும் தடை பொருந்தும்.
காரணம்: சிங்கப்பூரை தூய்மையான மற்றும் பசுமையான நாடாக பராமரிக்க அரசாங்கம் விரும்புகிறது. புகைபிடித்தல் சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதால் இந்த தடை அமல்படுத்தப்பட்டுள்ளது.
தண்டனை:
- முதல் முறை பிடிபட்டால் S$200 (சுமார் 12,000 ரூபாய்) அபராதம் விதிக்கப்படும்.
- மறுமுறை பிடிபட்டால் S$1,000 (சுமார் 60,000 ரூபாய்) வரை அபராதம் விதிக்கப்படலாம்.
சிகரெட் துண்டுகளை வீசுதல்: பொது இடங்களில் சிகரெட் துண்டுகளை வீசுவது “Littering” (குப்பை போடுதல்) என கருதப்படுகிறது. இதற்கு தனி அபராதம் விதிக்கப்படும்.
3. பொது இடங்களில் உமிழ்தல் கூடாது: தெருக்கள், பூங்காக்கள் மற்றும் பொது இடங்கள் உட்பட எங்கும் உமிழ்தல் கூடாது.
காரணம்: சிங்கப்பூரின் தூய்மையை பராமரிக்கவும். நோய்கள் பரவுவதை தடுக்கவும் இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
தண்டனை:
- முதல் முறை பிடிபட்டால் S$1,000 (சுமார் 60,000 ரூபாய்) அபராதம் விதிக்கப்படும்.
- மீண்டும் செய்தால், S$2,000 (1.2 லட்சம் ரூபாய்) அபராதம் மற்றும் சமுதாய சேவை (Community Service) செய்ய வேண்டியிருக்கும்.
4. குப்பை போடக்கூடாது:
சாக்லேட் காகிதம், சிகரெட் துண்டுகள், பிளாஸ்டிக் பைகள் என எதுவாக இருந்தாலும் பொது இடங்களில் வீசக்கூடாது.
காரணம்: சிங்கப்பூரோட சுத்தமான இமேஜை காப்பாத்தறதுக்காக.
தண்டனை:
- சிறிய குப்பைகள்: S$300 (சுமார் 18,000 ரூபாய்) அபராதம்.
- பெரிய அளவிலான குப்பைகள்: S$1,000 அபராதம் மற்றும் பொது சேவை (சீருடை அணிந்து குப்பைகளை சுத்தம் செய்ய வேண்டும்).
- மீண்டும் குற்றம் செய்தால்: S$5,000 (சுமார் 3 லட்சம் ரூபாய்) அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படலாம்.
5. ஜெய்வாக்கிங் (Jaywalking) – ரோட்டை தப்பா கிராஸ் பண்றது செய்யக்கூடாது: புலி கோடு (Zebra Crossing) இல்லாத இடத்துல ரோட்டை கிராஸ் பண்ண கூடாது.
காரணம்: சாலை பாதுகாப்பு மற்றும் ஒழுங்கை பராமரிக்க.
தண்டனை: S$20 (சுமார் 1,200 ரூபாய்) முதல் S$1,000 (60,000 ரூபாய்) வரை அபராதம் + 3 மாசம் வரை சிறை தண்டனை ஆகலாம்.
6. பொது போக்குவரத்துல சாப்பிடறது அல்லது குடிக்கறது செய்யக்கூடாது: MRT (மெட்ரோ), பேருந்துல சாப்பிடறது, தண்ணி குடிக்கறது, ஜூஸ் குடிக்கறது எல்லாம் தடை.
காரணம்: பொது இடங்களை சுத்தமா வைக்கறதுக்காக.
தண்டனை: S$500 (சுமார் 30,000 ரூபாய்) அபராதம். ட்ரை பண்ணி பார்க்காதீங்க, கேமரா எல்லா இடத்துலயும் இருக்கு!
7. பொதுப் போக்குவரத்தில் “பழங்களோட ராஜா”னு சொல்லப்படற டூரியன் பழம் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
காரணம்: டூரியன் பழத்தின் வாசனை சிலருக்கு பிடிக்காமல் இருக்கலாம். இதனால் பொது இடங்களில் மற்றவர்களுக்கு தொந்தரவு ஏற்படும்.
தண்டனை: S$500 (சுமார் 30,000 ரூபாய்) வரை அபராதம் விதிக்கப்படலாம். சில இடங்களில் உள்ளூர் விதிகளின்படி அபராதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
8. போதைப்பொருள் (Drug Offenses):
போதைப்பொருள் வைத்திருக்கறது, விக்கறது, பயன்படுத்தறது எல்லாம் பெரிய குற்றம்.
காரணம்: சிங்கப்பூர் போதைப்பொருளுக்கு எதிரா மிக கண்டிப்பான நிலைப்பாடு எடுத்திருக்கு.
சுற்றுலாப் பிரியர்களுக்கு மகிழ்ச்சி: சிங்கப்பூரில் ஆசியாவின் முதல் சாகச வனவிலங்குப் பூங்கா திறப்பு!
தண்டனை:
- சின்ன அளவு வைத்திருந்தாலும்: 10 வருஷம் சிறை + 10 ராட்டினால் அடி (Caning).
- கடத்தல் அல்லது பெரிய அளவு: மரண தண்டனை (தூக்கு). எடுத்துக்காட்டா, 500 கிராம் கஞ்சா அல்லது 15 கிராம் ஹெராயின் வைத்திருந்தா மரண தண்டனை உறுதி.
9. வண்டலிசம் (Vandalism):
பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துதல், சுவர்களில் எழுதுதல் அல்லது கிறுக்குதல் சட்டப்படி குற்றமாகும்.
காரணம்: நகரத்தின் அழகு மற்றும் ஒழுங்கை பராமரிக்க சிங்கப்பூர் அரசு விரும்புகிறது.
தண்டனை: S$2,000 (1.2 லட்சம் ரூபாய்) அபராதம் + 3 முதல் 8 ராட்டினால் அடி + 3 வருஷம் வரை சிறை.
10. பறவைகளுக்கு (புறா) சாப்பாடு போடறது செய்யக்கூடாது: புறாக்களுக்கு உணவு போடறது தடை.
காரணம்: பறவைகள் அதிகமா கூடி, அசுத்தம் பண்ணலாம்.
தண்டனை: S$500 (30,000 ரூபாய்) அபராதம்.
ராட்டினால் அடி (Caning):
சிங்கப்பூர்ல சில குற்றங்களுக்கு உடல் தண்டனையா ராட்டினால் அடி கொடுப்பாங்க. இது ஆண்களுக்கு மட்டும் (18-50 வயசு) பொருந்தும். பெண்களுக்கு இது இல்லை.
சட்டம் ஏன் இவ்வளவு கண்டிப்பு?
சிங்கப்பூர் ஒரு சின்ன நாடு, மக்கள் தொகை 5.7 மில்லியன் தான். ஒழுங்கு இல்லைனா சமூகம் சீர்குலையும்னு அரசு நம்புது.
சுற்றுலாப் பயணிகளுக்கு: சிங்கப்பூருக்கு போறவங்க இந்த சட்டங்களை மதிக்கலைனா, “நான் டூரிஸ்ட்”னு சொல்லி தப்பிக்க முடியாது. எல்லாருக்கும் சட்டம் ஒண்ணு தான்.