TamilSaaga

“சிங்கப்பூர் புலம்பெயர்ந்த வீட்டுப் பணியாளர்கள் கவனத்திற்கு” : உங்கள் நலன் காக்க MOM வெளியிட்ட பதிவு

சிங்கப்பூரில் உள்ள புலம்பெயர்ந்த வீட்டுப் பணியாளர்களின் (MDWs) நல்வாழ்வைக் கவனித்துக்கொள்ள முதலாளிகள் கடமைப்பட்டுள்ளனர். சம்பளம் மற்றும் பாதுகாப்பான வேலை நிலைமைகளை உடனடியாக வழங்குவதை உறுதி செய்தல், அத்துடன் ஓய்வுக்கான போதுமான நேரம், முறையான தங்குமிடம் மற்றும் போதுமான மருத்துவ பராமரிப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்களை வழங்குதல் ஆகியவை இதில் அடங்கும்.

அவ்வாறு செய்யத் தவறிய தவறான முதலாளிகள் மீது சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் நடவடிக்கை எடுக்கும். மேலும் இதுபோன்ற நிலையில் உதவி தேவைப்படும் MDW-க்கள் MOMன் MDW ஹெல்ப்லைனை 1800 339 5505 என்ற எண்ணில் அழைக்கலாம் அல்லது CDE எனப்படும் Centre for Domestic Employeesஐ 1800 2255 233 என்ற எண்ணில் அழைக்கலாம். நீங்கள் MOM-க்கு எந்தவித குற்றத்தைப் பற்றி புகாரளிக்க விரும்பினால், 6438 5122க்கு அழைக்கவும் என்று மனிதவள அமைச்சகம் வெளியிட்ட முகநூல் பதிவில் தெரிவித்துள்ளது.

மேலும் MDWகளுக்கு முறையாக சம்பளம் அளிக்காத முதலாளிகளுக்கு 10,000 வரை அபராதம் அல்லது 12 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். பல்வேறு குற்றங்களில் ஈடுபடும் அத்தகைய முதலாளிகள் புலம்பெயர்ந்த வீட்டுப் பணியாளர்களை பணியில் நியமிப்பதில் இருந்து முற்றிலும் நிறுத்தப்படுவார்கள்.

சிங்கப்பூரில் MDW (Migrant Domestic Workers) எனப்படும் புலம்பெயர்ந்த வீட்டு பணியாளர்களுக்கு என்று தனி வேலை வாய்ப்பு சோதனை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து பணிப்பெண்களை சிங்கப்பூரில் அமர்த்தும் ஏஜென்சிகள், வெளிநாட்டு வீட்டுப் பணியாளர்கள் மற்றும் அவர்களது முதலாளிகள் வீட்டில் பணிக்கு சேர்ந்த மூன்று மாதங்களுக்குள் குறைந்தபட்சம் ஒரு வேலை வாய்ப்பு சோதனையை நடத்த வேண்டும் என்று மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வேலைவாய்ப்பு நிறுவனங்களுக்கான புதிய உரிம நிபந்தனைகளின் கீழ் இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று MOM தெரிவித்துள்ளது. நேற்று வியாழக்கிழமை (அக்டோபர் 28) அன்று வெளியான ஊடக வெளியீட்டில் மனிதவள அமைச்சகம் (MOM) ஒரு தொலைபேசி அழைப்பு அல்லது நேரடி Check-In மூலம் இந்த சோதனையை செய்யலாம் என்று அறிவுறுத்தியுள்ளது. “வரும் டிசம்பர் 1, 2021க்குப் பிறகு வீடுகளில் தங்க வைக்கப்பட்டிருக்கும் அனைத்து புலம்பெயர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கும் (MDWs) இது பொருந்தும்.” என்பது நினைவுகூரத்தக்கது.

Related posts