TamilSaaga

“சில்லென்ற வானிலை தொடரும்” – சிங்கப்பூரில் ஜனவரி 2022 தொடக்கத்தில் அதிக மழைக்கு வாய்ப்பு

சிங்கப்பூரில் இந்த மாத தொடக்கத்தில் மழை மற்றும் குளிர்ச்சியான வானிலை தான் நிலவும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த ஜனவரி மாதத்தில் சில நாட்களில் 23 டிகிரி செல்சியஸ் வரை வானிலை குறைவாக இருக்கும் என்று சிங்கப்பூர் வானிலை ஆய்வு மையம் (MSS) தெரிவித்துள்ளது. மேலும் ஜனவரி மாதத்தின் இரண்டாவது வாரத்தில் மழை குறையும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஜனவரி தொடக்கத்தில் மழை பொழியும் வானிலை காரணமாக சில நாட்களில் தினசரி வெப்பநிலை 23°C முதல் 31°C வரை குறையும்.

“சிங்கப்பூரில் 2,80,000 குடும்பங்களுக்கு பொது போக்குவரத்து வவுச்சர்கள்” : எப்படி பெறுவது? – முழு விவரம்

அதேபோல இந்த ஜனவரி மாதத்தின் மீதமுள்ள பதினைந்து நாட்களில், தினசரி வெப்பநிலை 24°C முதல் 33°C வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தீவில் பரவலாக குறுகிய கால இடியுடன் கூடிய மழை இன்னும் சில நாட்களில் எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக மத்திய வேளைகளில் இடியுடன் கூடிய மலையை எதிர்பார்க்கலாம். சில நாட்களில் மழையுடன் கூடிய வெப்பமான மற்றும் அவ்வப்போது காற்று வீசும் நிலையையும் மக்கள் எதிர்பார்க்கலாம்.

இந்த புதிய ஆண்டின் தொடக்கத்தில் தென் சீனக் கடலில் வடகிழக்கு காற்று (அல்லது பருவமழை) எழுச்சியைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பருவமழை எழுச்சி சில நாட்களுக்கு நீடிக்கும் மற்றும் சிங்கப்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அவ்வப்போது மிதமான மற்றும் கனமான இடியுடன் கூடிய மழை பெய்ய வழிவகுக்கும். அதன்பின், பிற்பகலில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“சாதிக்க மட்டுமல்ல, சேவை செய்யவும் வயது தடையல்ல” : வெள்ளத்தில் தத்தளித்த நாடு – காக்க களமிறங்கிய “பிஞ்சு உள்ளம்”

பருவமழை அதிகரிப்பு என்றால் என்ன?

உயர் அழுத்த அமைப்புகள் (பூமிக்கு மேலே உள்ள காற்று நிறை சுற்றியுள்ள பகுதிகளை விட அடர்த்தியாக இருக்கும்) பெரும்பாலும் வடக்கு ஆசியாவின் கண்டத்தில் உருவாகி, வட ஆசிய நிலப்பரப்பில் குளிர்ந்த காற்றைக் கொண்டு வருகிறது. வடகிழக்கு பருவமழை எழுச்சி என்பது காற்றின் வேகம் திடீரென அதிகரித்து தென் சீனக் கடலை நோக்கி நகரும் குளிர்ந்த காற்றின் எழுச்சியைக் குறிக்கிறது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts