TamilSaaga

“சிங்கப்பூரில் 2,80,000 குடும்பங்களுக்கு பொது போக்குவரத்து வவுச்சர்கள்” : எப்படி பெறுவது? – முழு விவரம்

சிங்கப்பூரில் சுமார் 2,80,000க்கும் மேற்பட்ட கடிதங்கள் தீவில் உள்ள வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. 30 வெள்ளி பொதுப் போக்குவரத்து வவுச்சரை மக்கள் பெறுவதற்காக இந்த கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வவுச்சர்கள் கட்டண அட்டைகளை நிரப்ப அல்லது மாதாந்திர சலுகைப் பாஸை வாங்க பயன்படுத்தலாம். இது மூன்றாவது முறை அளிக்கப்படும் வவுச்சர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு டிசம்பர் 26ம் தேதி தொடங்கப்பட்ட சமீபத்திய பொதுப் போக்குவரத்துக் கட்டண உயர்வைச் சமாளிக்க குறைந்த வருமானம் பெறும் பயணிகளுக்கு உதவுவதற்காக ஒதுக்கப்பட்ட 6,00,000 பொதுப் போக்குவரத்து வவுச்சர்களின் அளவை விட இது குறைவு.

இந்தியா உள்ளிட்ட நாடுகள்.. “மிகவும் தேவைப்படும்” புலம்பெயர்ந்த தொழிலாளர்களை வரவேற்க சிங்கப்பூர் தயாராகிறது – பிரதமர் லீ

ஜனவரி 10 முதல் அக்டோபர் 31 வரை, ஒரு நபருக்கு $1,600 அல்லது அதற்கும் குறைவான குடும்ப வருமானம் உள்ள குடும்பங்கள், வவுச்சரைப் பெறாதவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். நேரில் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அல்லது கூடுதல் உதவி தேவைப்படுபவர்கள் தங்கள் உள்ளூர் சமூக மையங்கள் அல்லது சமூக கிளப்புகளுக்குச் செல்லலாம். அவர்கள் பிப்ரவரி 14 முதல் அக்டோபர் 31 இந்த வவுச்சர்களை பெற முடியும்.

அந்தந்த குடிமக்கள் ஆலோசனைக் குழுக்கள் (CCC) இந்த விண்ணப்பங்களை அதன்படி மதிப்பீடு செய்யும் என்று போக்குவரத்து அமைச்சகம் (MOT) மற்றும் மக்கள் சங்கம் (PO) நேற்று திங்கள்கிழமை (ஜனவரி 3) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தன. பொதுப் போக்குவரத்து வவுச்சருக்கு வெற்றிகரமாக விண்ணப்பித்த குடும்பங்களுக்கு மின்னஞ்சலில் அறிவிப்புக் கடிதம் அனுப்பப்படும். வவுச்சரை ரிடீம் செய்ய அவர்கள் கடிதத்தில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றலாம். அனைத்து வவுச்சர்களையும் மார்ச் 31, 2023க்குள் மீட்டெடுக்க வேண்டும். குடியிருப்பாளர்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், அவர்களது உள்ளூர் சமூக மையங்கள் அல்லது சமூக கிளப்புகளை அணுகலாம்.

சிங்கப்பூரில் ஆட்டம்.. பாட்டம்.. கொண்டாட்டம் : புத்தாண்டில் காற்றில் பறந்த கொரோனா தடுப்பு விதிகள் – MTF ஆய்வு

முதியவர்கள், மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் குறைந்த ஊதியத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான சலுகைக் கட்டணம் ஒரு சதவீதம் உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் ரொக்கக் கட்டணம், ஒருமுறை பயணம் செய்வதற்கான டிக்கெட்டுகள், மாதாந்திர சலுகைகள் மற்றும் பயண அனுமதிச் சீட்டுகளுக்கான விலைகள் மாறாமல் உள்ளன என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts