TamilSaaga

சிங்கப்பூர் தடுப்பூசி மையங்களில் இனி முன்பதிவு அவசியமில்லை – அரசு சிறப்பு ஏற்பாடு

ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசி வழங்கும் கோவிட் -19 தடுப்பூசி மையங்களில் நேரடியாக சென்று தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் .

வருகின்ற செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 10) முதல், கோவிட் -19 தடுப்பூசியின் முதல் டோஸுக்கு முன் வராத அனைத்து சிங்கப்பூரர்கள், நிரந்தர குடியிருப்பாளர்கள் மற்றும் நீண்ட கால பாஸ் வைத்திருப்பவர்கள் தடுப்பூசி மையங்களில் ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியை பெற முன் பதிவு செய்ய வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு இது மிகவும் வசதியாக இருக்கும் என்று சுகாதார அமைச்சகம் (MOH) ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. ஃபைசர்-பயோஎன்டெக்/கொமர்னாட்டி தடுப்பூசியை வழங்க 26 சமூக தடுப்பூசி மையங்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

தடுப்பூசி வழங்கும் 11 சமூக தடுப்பூசி மையங்களில் ஏதேனும் ஒன்றில் மோடர்னா தடுப்பூசியை பெற விரும்பும் சிங்கப்பூர் குடியிருப்பாளர்களுக்கு ஆகஸ்ட் 2 முதல் நேரடியாக அனுமதிக்கப்படுவார்கள்.

ஜூலை நடுப்பகுதியில் இருந்து, 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் எந்த தடுப்பூசி மையம், பாலி கிளினிக் அல்லது பொது சுகாதார தயாரிப்பு கிளினிக்கிற்கு முன் பதிவு இல்லாமல் தடுப்பூசி போடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts