சிங்கப்பூரில் வேலை செய்து வரும் வெளிநாட்டு ஊழியர்கள் எல்லாருமே ஒரு குடும்பமாக இருக்கிறார்கள். இது வாக்கியத்துடன் முடிந்து விடும் விஷயம் இல்லை. ஒவ்வொரு முறையும் அதனை எடுத்துக்காட்டுடன் நம்ப வைக்கும் விஷயங்களும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.
சிங்கப்பூரில் வேலைக்காக வந்திருக்கிறார் 21 வயது கூட நிரம்பாத பங்களாதேஷ் இளைஞர். லட்சத்தில் ஏஜென்ட்டிடம் காசினை கொடுத்து IPA எடுத்து வேலைக்கு சிங்கையில் காலடி எடுத்து வைத்து விட்டார். ஆனால் அவரின் போதாத காலமோ என்னவோ மருத்துவ செக்கப்பில் அவருக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அவருக்கு காசநோய் இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால் அது எத்தனை நாட்களாக இருப்பது குறித்த தகவல் அறியப்படவில்லை.
இதையும் படிங்க: சிங்கப்பூரில் காணாமல் போன தமிழக ஊழியர்… 8 நாட்கள் கழித்து சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட உடல்… உட்கார்ந்த நிலையில் உயிரை விட்ட கபடி வீரர்..!
இதைப் போன்ற நோய் தாக்கப்பட்டவர்கள் உடனே நாட்டினை விட்டு வெளியேற்றப்படுவார்கள். அந்த வகையில் அந்த இளைஞரையுமே உடனே விமானம் புக் செய்து அனுப்ப திட்டமிடப்பட்டது. இந்த தகவல் சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் ItsRainingRaincoats என்ற தன்னார்வ அமைப்புக்கு தெரிந்து இருக்கிறது.
வெளிநாட்டு ஊழியராக வேலைக்கு வரும் போது அவர் எத்தனை கஷ்டப்பட்டு எவ்வளவு செலவு செய்து இங்கு வந்திருப்பார் என்பதை புரிந்து கொண்டவர்கள். உடனே funds திரட்ட தொடங்கி இருக்கிறார்கள். அப்போது தான் சிங்கப்பூர் வந்தவர் என்பதால் அவரிடம் வங்கி கணக்கு இல்லை. இதனால் பணம் திரட்டும் வேலைகள் துரிதப்படுத்தப்பட்டது.
இதையும் படிங்க: சிங்கப்பூரில் கெத்து காட்டிய புதுக்கோட்டை சிங்கங்கள்… அடி ஒவ்வொன்னும் இடி மாதிரி இருந்துச்சா… 24 டீமை அடித்து நொறுக்கி சாம்பியனான சுவாரஸ்யம்
அடித்து பிடித்து ஓடிய இளைஞர்கள் விமானம் கிளம்ப இருந்த கடைசி நிமிடத்தில் அந்த இளைஞரை சந்தித்து தாங்கள் திரட்டிய பணத்தினை கொடுத்து வழியனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அங்கிருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இதுகுறித்து ItsRainingRaincoats என்ற பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கூறியவர்கள், எங்களிடம் வரும் ஒவ்வொரு பிரச்னைக்கும் எங்களால் உதவ முடியாது. ஆனால் எப்போது, எங்கு முடியுமோ, நாங்கள் எங்களால் முடிந்ததைச் செய்வோம். நட்சத்திர மீனின் கதையைப் போலவே, தேவைப்படும் ஒரு மில்லியனில் ஒருவரை மட்டுமே நாம் காப்பாற்ற முடியும். ஆனால் அது ஒரு உலகத்தை மாற்றும். இந்த இளைஞன் கண்களில் ஒளியுடன் திரும்பிச் சென்றதை உறுதிப்படுத்த நேற்று முன்வந்த அனைவருக்கும் நன்றி என்றனர். சல்யூட் பாய்ஸ்!