சிங்கப்பூரில் தீபாவளியைக் கொண்டாடும் வகையில் இஸ்தானா நவம்பர் 4-ஆம் தேதி திறக்கப்படும் என்று குடியரசுத் தலைவர் அலுவலகம் வெள்ளிக்கிழமை (அக். 22) தெரிவித்துள்ளது.
பார்வையாளர்கள் இஸ்தானாவின் வெளிப்புற இடங்கள் மற்றும் தோட்டங்களை மட்டுமே பார்வையிட முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 4 ம் தேதி இஸ்தானாவுக்குச் செல்ல விரும்புவோர் முன்கூட்டியே டிக்கெட்டுகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று ஜனாதிபதி அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.
டிக்கெட்டுகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் காலை 9 மணி, 11 மணி, மதியம் 1 மணி அல்லது மாலை 3 மணி முதல் இரண்டு மணி நேர நேரத்தை தேர்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு விண்ணப்பமும் அதிகபட்சம் இரண்டு டிக்கெட்டுகளுக்கு மட்டுமே அனுமதி.
டிக்கெட்டுகளுக்கு கட்டணம் இல்லை, இது மின்னணுப் பதிவு முறையால் ஒதுக்கப்படும். பதிவின் முடிவுகள் இறுதியானது என ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
இஸ்தானா மைதானம் கடந்த ஆகஸ்டு 28 அன்று தேசிய தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது.
தீபாவளிக்கு திறக்கப்படும் இல்லத்தின் நிகழ்ச்சிகள், சுற்றுப்பயணங்கள், சாவடிகள், உணவு மையங்கள் அல்லது நினைவு பரிசுகள் விற்பனைக்கு இருக்காது என்று ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. பிரதான கட்டிடத்தின் உள்ளே சுற்றுப்பயணங்களும் கிடையாது என அறிவித்துள்ளது.
பார்வையாளர்கள் எப்போதும் தங்கள் முகமூடிகளை அணிய வேண்டும். உணவு மற்றும் பானங்களை உட்கொள்வது உட்பட முகமூடி அணியாமலிருக்கும் நடவடிக்கைகள் அனுமதிக்கப்படாது என்று கூறிப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் பாதுகாப்பான தொலைதூர நடவடிக்கைகளை கடைபிடிப்பதை உறுதி செய்ய அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என அறிவித்துள்ளது.
ஒவ்வொரு டிக்கெட்டும் ஒதுக்கப்பட்ட நேர இடைவெளியில் தீபாவளி திறந்தவெளி இல்ல நிகழ்வுக்கு ஒரு பார்வையாளரை அனுமதிக்கும். கைக்குழந்தைகள் உட்பட குழந்தைகளும் அனுமதிக்கப்பட்ட செல்லுபடியாகும் டிக்கெட்டை வைத்திருக்க வேண்டும்.
இஸ்தானா பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் ஐந்து நாட்களில் பொதுமக்களுக்கு திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.