TamilSaaga

வந்தே பாரத் – தமிழகத்தின் தலைநகர் சென்னைக்கு வாரம் இருமுறை பறக்கும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

உலக அளவில் கொரோனா பரவல் காரணமாக உள்ளூர் மற்றும் பன்னாட்டு போக்குவரத்து பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக உலகின் பல நாடுகளில் இன்னும் முழுமையாக விமான சேவை அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல சிங்கப்பூர் அரசும் கடந்த ஓர் ஆண்டிற்கு மேலாக பல நாடுகளுக்கு தங்களுடைய எல்லைகளை முடிவைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. அண்டை நாடான இந்தியாவில் கொரோனா பரவல் அதிகமாக காணப்படும் நிலையில் சிங்கப்பூர் இந்தியாவிற்கு இன்னும் தனது எல்லைகளை திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் வந்தே பாரத் என்ற திட்டத்தின் கீழ் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் மூலம் அவசர தேவை உள்ளவர்கள் தற்போது சிங்கப்பூர் வந்து செல்கின்றனர். மேலும் இந்த சேவை கடந்த ஓர் ஆண்டிற்கு மேலாக செயல்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சிங்கப்பூரில் இருந்து தமிழகத்தின் தலைநகர் சென்னைக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் சிறப்பு விமான சேவை இயக்கப்படுகிறது. திங்கள் மற்றும் வியாழன் ஆகிய கிழமைகளில் சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு நேரடி விமான சேவை இயங்குகிறது.

மேலும் ஜூலை மாதத்திற்கான சிறப்பு விமான சேவை குறித்த முழு தகவல் விரைவில் வெளியாகும்.

Related posts