TamilSaaga

தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு வெளிநாட்டு பயணத்தில் சலுகை – பணிக்குழு இணைத்தலைவர்கள் கருத்து

உலகம் முழுக்க கொரோனா தாக்கத்தால் பெரும்பாலான நாடுகள் வெளிநாட்டு பயணங்களுக்கான கதவுகளை இன்னும் திறக்கவில்லை. இந்த நிலையில் சிங்கப்பூரில் வெளிநாட்டு பயணங்களை மீண்டும் அனுமதிக்கும் காலத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு சில சலுகைகள் வழங்கப்படலாம் என அமைச்சுகளுக்கான பணிக்குழு இணைத்தலைவர் திரு.கான் கிம் யோங் தெரிவித்தார்.

சிங்கபூருக்கு திரும்பும் மக்களில் தடுப்பூசி செலுத்திக்கொண்டோர்கள் கட்டாய தனிமைப்படுத்துதல் காலத்தின் நாட்கள் குறைக்கப்படலாம் அல்லது தனிமைக்காலத்தை கட்டாயப்படுத்தாமல் பரிசோதனை மட்டும் போதுமானது போன்ற சலுகைகள் வழங்க வாய்ப்புள்ளது.

இதில் அவர்கள் எந்த நாட்டிலிருந்து வருகிறார்கள் என்பதை பொறுத்து அதற்கேற்றவாறு மாற்றியமைக்கப்படும் என மற்றோரு இணைத்தலைவரான லாரன்ஸ் வோங் கூறினார்.

வருகின்ற ஆகஸ்ட் மாதத்திற்குள் சிங்கப்பூரில் உள்ள மூன்றில் இரு பங்கு மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இருந்தாலும் இந்த எண்ணிக்கையானது மீண்டும் வெளிநாட்டு பயணங்களை அனுமதிப்பதற்கு போதுமானாதாக இல்லை.

தடுப்பூசி திட்டத்தில் அதிக அளவு மக்கள் அதனை செலுத்திக்கொண்டால் அதன் அடிப்படையில் குறிப்பிட்ட இலக்கை எட்டியதும் வெளிநாட்டு பயணங்களை அனுமதிக்க வாய்ப்பு உள்ளது.

எனவே தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் விகிதம் அதிகரிக்க வேண்டும். மக்கள் முன்வந்து அதிக அளவில் செலுத்திக்கொள்ள வேண்டும். அப்போது தான் கொரோனா அச்சத்தால் நாம் கடந்த 1.5 ஆண்டுகளாக நிறுத்தி வைத்துள்ள பல நடவடிக்கைகள் சேவைகளை மீண்டும் துவங்க முடியும் என வர்த்தக மற்றும் தொழில் அமைச்சரான திரு.கான் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் தடுப்பூசி அதிக அளவில் செலுத்தி முடிக்கும் சூழலில் வெளிநாட்டு பயணத்துக்கான கதவுகள் சலுகைகளுடன் திறக்கப்படும் என அறிய முடிகிறது.

Related posts