TamilSaaga

“சாங்கி விமான நிலையத்தில் ஆட்கள் பற்றாக்குறை; வேலைக்கு வாங்க” – வெளிநாட்டு ஊழியர்களை இருகரம் கூப்பி வரவேற்கும் அமைச்சர் ஈஸ்வரன்

சிங்கப்பூர்: சாங்கி விமான நிலையம் சீராக இயங்குவதை உறுதிசெய்ய விமானப் போக்குவரத்துத் துறை புதிதாக ஆட்களை சேர்க்கும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளதாக அமைச்சர் எஸ் ஈஸ்வரன் இன்று (மார்ச் 30) தெரிவித்துள்ளார்.

COVID-19 இன் தாக்கம் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளில் சாங்கி விமான நிலையம் அதன் பணியாளர்களின் “குறிப்பிடத்தக்க விகிதத்தை” இழந்துவிட்டது. நிறைய பேர் தங்களது பணியில் இருந்து விலகிவிட்டனர்.

இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள அமைச்சர், “சிங்கப்பூர் தனது எல்லைக் கட்டுப்பாடுகளை தளர்த்துவதால், ஆட்கள் தேவை உடனடியாக அதிகரித்துள்ளது, இது அரசின் “முக்கிய சவாலாக” இருக்கும். இதற்காக அதிக அளவில் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். உள்நாட்டிலும், மலேசியா போன்ற பிற நாடுகளிலிருந்தும், ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

சிங்கப்பூர் கப்பல் கட்டும் தளத்தில் விபத்து.. தூக்கி வீசப்பட்ட 2 வெளிநாட்டு ஊழியர்கள் – கண்ணிமைக்கும் நேரத்தில் பிரிந்த உயிர்

ஆனால் புதிய தொழிலாளர்களைப் பயிற்றுவிப்பதற்கும், செயல்பாடுகளைப் பற்றி அவர்களைப் பழக்கப்படுத்துவதற்கும் நேரம் எடுக்கும். ஆனால் நான் பார்த்த மற்றும் கேள்விப்பட்டதன் அடிப்படையில், நமது விமானப் போக்குவரத்து பணியாளர்கள் எதிர்பார்த்த அளவுக்கு நன்கு தயாராகி வருகின்றனர் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

வரும் ஏப்ரல்.1ம் தேதி முதல், முழுமையாக தடுப்பூசி செலுத்திய அனைத்து பயணிகளும் சிங்கப்பூர் வர அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், சாங்கி விமான நிலையத்தில் பணியாளர்களை நியமிக்கும் பணி, மிக துரிதமாக நடைபெற்று வருகிறது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts