TamilSaaga

மூன்றில் இரண்டு பங்கு மக்களுக்கு தடுப்பூசி – லட்சிய இலக்கோடு பயணிக்கும் சிங்கப்பூர்

சிங்கப்பூரில் வரும் ஆகஸ்ட் 9ம் தேதி சிங்கப்பூர் தேசிய தினத்திற்குள் மூன்றில் இரண்டு பங்கு மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும் என்ற நிதியமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஆகஸ்ட் மாதத்திற்குள் சிங்கப்பூர் மக்கள் தொகையில் பாதி பேருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசியும் அளிக்கப்படும் என்று அவர் வெளியிட்டிருந்த முகநூல் பதிவை அவர் சுட்டிக்காட்டினார்.

சிங்கப்பூரில் தற்போது மின்னல் வேகத்தில் தடுப்பூசி வழங்கும் பணி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது 12 வயது முதல் 39 வயது வரை உள்ள மக்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடந்து வருவது நினைவுகூரத்தக்கது.

மேலும் அடுத்த வாரம் சிங்கப்பூரில் பள்ளிகள் மீண்டும் படி படியாக திறக்கவுள்ள நிலையில் சுமார் 2,97,000 மாணவர்கள் கல்வி நிலையங்களுக்கு வருவதற்கு முன்பே ஒரு டோஸ் தடுப்பூசியையாவது பெற்றிருப்பர் என்று தற்போது கல்வி அமைச்சகம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

18 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு தங்களுடைய தடுப்பூசியை தேர்தெடுக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. முன்களப்பணியாளர்கள் தொடங்கி தற்போது அனைத்து தரப்பினருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து வந்த 9 பேர் உள்பட இன்று சிங்கப்பூரில் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதுகுறிப்பிடத்தக்கது.

Related posts