TamilSaaga

உணவகம், கஃபேக்களில் தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே அனுமதி… பிரான்ஸ் அரசு சட்டம் – நாடு முழுதும் எதிர்ப்பு

பிரான்ஸ் நேற்று (ஜிலை.26) திங்கள்கிழமை அதிகாலை ஒரு சர்ச்சைக்குரிய சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. இது தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் தொடங்கி உணவகங்கள், கஃபேக்கள், இன்டர்சிட்டி போக்குவரத்து மற்றும் பிற இடங்களுக்கு செல்ல சலுகை அளிக்கும் கட்டமாகும். இது கடந்த இரண்டு வாரங்களாக நாடு தழுவிய எதிர்ப்புக்களை கிளப்பியுள்ளது.

இச்சட்டத்தின் கீழ் வரும் இடங்களுக்கான அணுமதியானது சமீபத்திய கொரோனா வைரஸ் நெகட்டீவ் சோதனை அல்லது நோய்த்தொற்றின் மூலம் நோய் எதிர்ப்பு சக்திக்கான சான்று ஆகியவை மூலம் வழங்கப்படும். அதே நேரத்தில் இந்த தகுதிகளை பூர்த்தி செய்யாத எவரும் சட்டப்பூர்வமாக அந்த இடங்களுக்குள் நுழைய முடியாது.

கடந்த வாரங்களில் தடுப்பூசி விகிதங்களை அதிகரிப்பதே நோக்கம் என்றும் அதர்காகவே அரசாங்கம் “ஹெல்த் பாஸ்” என்பதை கொண்டு வருவதாகவும் என்று பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கூறியுள்ளார்.

இந்த வார இறுதியில் பாராளுமன்றம் புதிய மசோதாவை நிறைவேற்றுவதற்கு முன்பே, இரண்டு வாரங்களுக்கு முன்பு மக்ரோன் அறிவித்த மாற்றங்கள் தடுப்பூசி பாதுகாப்புக்கு தாக்கத்தை ஏற்படுத்தியதாகத் காணப்படுகிறது. கொரோனா வைரஸ் தடுப்பூசி-முன்பதிவு தளங்கள் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே முன்பதிவுகள் அதிகளவில் பதிவுசெய்யப்பட்டன. மேலும் அன்றிலிருந்து தினசரி தடுப்பூசிகளின் எண்ணிக்கையில் நாடு பல அதிகமான பதிவுகளை எட்டியது என்ற தகவலும் வெளிவந்துள்ளது.

ஜனாதிபதி மக்ரோன் தனது ட்விட்டரில் 40 மில்லியன் குடியிருப்பாளர்கள் அதாவது சுமார் 60 சதவிகித மக்கள் இப்போது குறைந்தது ஒரு தவணை தடுப்பூசி பெற்றுள்ளனர் என்று கூறியுள்ளார்.

Related posts