TamilSaaga

“உறவினரின் Trace Together டோக்கனைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் பெண்” – ஐந்தாண்டு சிறைக்கு வாய்ப்பு

சிங்கப்பூரில் 34 வயது பெண் ஒருவர் தனது மருமகளின் ட்ரேஸ் டுகெதர் டோக்கனைப் பயன்படுத்தி பல இடங்களில் நுழைந்ததாகக் கூறப்படும் வழக்கில் இன்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 12) நீதிமன்றத்தில் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. சிங்கப்பூரில் இதுபோன்று நடந்து முதல் வழக்கு இதுவென்று கருதப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெருந்தொற்று நோயாளியுடன் நெருங்கிய தொடர்புக்கு வந்த பிறகு, பாலிமரேஸ் சங்கிலி எதிர்வினை சோதனை முடிவுக்காகக் காத்திருக்கும் போது, ​​பிரிஸ்கில்லா டான் சியூ சின் என்ற அந்த பெண்மணி, வீட்டில் சுயமாக தனிமைப்படுத்துவதற்கான தனது நிறுவனத்தின் உத்தரவை புறக்கணித்ததாகக் கூறப்படுகிறது. இன்று வெள்ளிக்கிழமை, டான் மீது மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. மேலும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் அவருக்கு விதிக்கப்படலாம்.

நீதிமன்ற ஆவணங்களின்படி, டான் தனது மருமகளின் ட்ரேஸ் டுகெதர் டோக்கனைப் பயன்படுத்தி, ஏப்ரல் 30 அன்று மாலை சேஃப்என்ட்ரி முறையை ஏமாற்றி, மேல் செராங்கூன் சாலையில் உள்ள ஷாப்பிங் மாலான தி போயிஸ் சென்டருக்குள் நுழைந்ததாகக் கூறப்படுகிறது. மே 2 அன்று மாலை, எஸ்பிளனேட் லைப்ரரி மற்றும் மெரினா சதுக்கத்தில் நுழைய டோக்கனைப் பயன்படுத்தியபோது அவர் மீண்டும் அவ்வாறு செய்ததாகக் கூறப்படுகிறது.

டான் டிசம்பர் 2 ஆம் தேதி நீதிமன்றத்திற்குத் திரும்ப ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் சமூகப் பொறுப்புடன் இருக்குமாறும், பெருந்தொற்று தடுப்பு பாதுகாப்பான மேலாண்மை நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்துக் கொள்ளுமாறும் காவல்துறை பொதுமக்களுக்கு நினைவூட்டியது.

Related posts