TamilSaaga

சிங்கப்பூரில் ‘Trace Together’ டோக்கன் விற்பனை இயந்திரங்கள் – எங்கே உள்ளது? யாருக்கும் பயன்படும்?

சிங்கப்பூரில் Trace Together டோக்கன்களை மாற்றும் விற்பனை இயந்திரங்கள் வரும் மாதங்களில் சிங்கப்பூர் முழுவதும் 100க்கும் மேற்பட்ட சமூக கிளப்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மால்களில் நிறுவப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சோதனை முயற்சியாக முதல் இரண்டு இயந்திரங்கள் இன்று திங்கள்கிழமை (ஜூலை 26) NEX மற்றும் சன் பிளாசா ஆகிய ஷாப்பிங் மால்களில் நிறுவப்பட்டுள்ளன என்று ஸ்மார்ட் நேஷன் மற்றும் டிஜிட்டல் அரசு குழு தெரிவித்துள்ளது. இந்த Trace Togetherடோக்கன்கள் பெருந்தொற்றின்போது நோய்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டுபிடிக்கும் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.

பொது உறுப்பினர்கள் இப்போது தங்கள் பழைய அல்லது தவறான டோக்கன்களை இந்த இயந்திரங்களின் மூலம் மாற்றலாம். இந்த இயந்திரங்கள் ஒவ்வொன்றும் 1,400 புதிய டோக்கன்களை சேமிக்கும் திறன்கொண்டது என்று கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், அவை முதல் முறையாக தங்கள் Trace Together டோக்கன்களை பெரும் பயனாளர்களுக்கு பயன்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts