TamilSaaga

மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் “இஸ்தானா” – ஆனால் “இதற்கெல்லாம்” அனுமதியில்லை : முழு விவரம்

சிங்கப்பூர் இஸ்தானா இல்லம் வரும் ஆகஸ்ட் 28ம் தேதி அன்று நடைபெறும் என்று ஜனாதிபதி அலுவலகம் இன்று வியாழக்கிழமை (ஆகஸ்ட் 19) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. தேசிய தினத்தை முன்னிட்டு இஸ்தானா இல்லம் முதலில் ஆகஸ்ட் 1ம் தேதி திறக்க திட்டமிடப்பட்டது. ஆனால் ஜூலை 22 அன்று சிங்கப்பூர் இரண்டாம் கட்ட உயர் எச்சரிக்கைக்கு திரும்பிய பிறகு அந்த நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டது.

மேலும் ஆகஸ்ட் 28ம் தேதி நடக்கும் இந்த நிகழ்வில் ஏற்கனவே டிக்கெட் வழங்கப்பட்ட பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இஸ்தானா பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் ஐந்து நாட்கள் பொதுமக்கள் பார்வைக்காக திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. தொற்றுநோய் காரணமாக, கடந்த பிப்ரவரி முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இஸ்தானாவின் திறந்தவெளி வெளிப்புற தோட்டங்கள் மட்டுமே ஆகஸ்ட் 28 அன்று பார்வையாளர்களுக்கு அணுகப்படும். “கட்டிடங்கள் மற்றும் பிற உட்புற இடங்களுக்கு அணுகல் இருக்காது” என்று ஜனாதிபதி அலுவலகம் ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் பெரிய குழுக்கள் கூடுவதைத் தவிர்ப்பதற்காக, இஸ்தானா மைதானத்திற்குள் நிகழ்ச்சிகள், சுற்றுப்பயணங்கள், சாவடிகள் அல்லது உணவு நிலையங்கள் எதுவும் இருக்காது. பொது பூங்காக்களில் தற்போது நடைமுறையில் உள்ளதை விட கூடுதல் பாதுகாப்பான மேலாண்மை நடவடிக்கைகளை இஸ்தானா செயல்படுத்தும். டிக்கெட் வைத்திருப்பவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தை கடைபிடிக்க வேண்டும், அதே நேரத்தில் முகமூடிகள் எப்போதும் வைத்திருக்க வேண்டும்.

Related posts