TamilSaaga

குறைந்தது “4 லட்சம் செலவு செய்து சிங்கப்பூர் வரும் ஊழியர்களே” – நீங்கள் கவனிக்கவேண்டிய 6 விஷயங்கள்

உலக அளவில் பல இளைஞர்கள் தாய் மண்ணை விட்டு பிற நாடுகளுக்கு சென்று பணிசெய்வதை பெரிய அளவில் விரும்புகின்றனர் என்பது நம் யாராலும் மறுக்க முடியாது உண்மை. அந்த வகையில் பல இளைஞர்கள் குறிப்பாக தமிழக இளைஞர்கள் சிங்கப்பூரில் வந்து பணிசெய்ய அதிக அளவில் விரும்புகின்றனர்.

சரி இந்த பதிவில் அப்படி தாயகம் விட்டு சிங்கப்பூர் வரும் இளைஞர்கள் என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும் என்பதை சற்று விரிவாக பார்க்கலாம்.

முதலில் சிங்கப்பூர் வரும் முன், ஒரு நல்ல ஏஜென்ட்டை அணுக வேண்டும் என்பதே உங்கள் முன் நிற்கும் முதல் சவால். ஆகவே நல்ல ஏஜென்ட்களை மட்டுமே நம்பி உங்கள் ஆவணங்களை கொடுத்து வேலையை தேர்ந்தெடுங்கள்.

சிங்கப்பூர் வரும் இளைஞர் கவனிக்க வேண்டிய அந்த 6 விஷயங்கள்

வேலைபார்க்கவிருக்கும் நிறுவனம்

நீங்கள் பல லட்சங்களை செலவு செய்து வரும்போது ஒரு நல்ல நிறுவனத்தை தேர்வு செய்வது தான் உங்கள் முக்கிய கடமை. நீங்கள் வேலைக்கு வரும் நிறுவனத்தின் welfare association மூலம் உங்களுக்கு என்னென்ன சலுகைகள் கிடைக்கும் என்பதை தீர விசாரித்துக்கொள்ளவேண்டும்.

உங்கள் நிறுவனம் சிங்கப்பூர் அரசு சொல்லும் சட்டதிட்டங்களை கடைபிடித்து நடந்தாலே அது நிச்சயம் சிறந்த நிறுவனமாகத்தான் இருக்கும் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை.

Exclusive : சொந்த ஊரில் தற்கொலை செய்து கொண்ட உடன்பிறந்த சகோதரன்.. இறுதிச்சடங்கிற்கு கூட போக முடியாமல் சிங்கப்பூரில் தவிக்கும் அண்ணன் – இவ்வளவு தானா இந்த வெளிநாட்டு வாழ்க்கை!

தொழிலாளி தங்கவைக்கப்படும் இடம்

Dormitoryகள் தான் சிங்கப்பூர் வரும் அதிக அளவிலான தொழிலாளர்கள் தங்கவைக்கப்படும் ஒரு இடம், ஆகவே நீங்கள் தங்கவைக்கப்படும் இடம் சுத்தமாக, சுகாதாரமாக இருக்குமா என்பதை நிச்சயம் நீங்கள் உறுதிசெய்துகொள்ள வேண்டும்.

மேலும் நீங்கள் தங்கியிருக்கும் இடத்திற்கு பக்கத்திலேயே உங்களுக்கு சமைக்க மற்றும் பிற அடிப்படை விஷயங்களுக்கு தேவைப்படும் அனைத்து பொருட்களும் கிடைக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ளவேண்டும்.

விடுமுறை

ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேரும் முன் நீங்கள் கவனிக்கவேண்டிய அடுத்த விஷயம் தான் “விடுப்பு”. அயராது உழைக்கும் மக்களுக்கு நிச்சயம் ஓய்வு வேண்டும், ஆகையால் ஒரு நாளுக்கு எத்தனை மணிநேரம் வேலை என்பதை தீர விசாரித்துக்கொள்ளவேண்டும்.

மேலும் வருடத்திற்கு எத்தனை நாள் விடுப்பு, மருத்துவ விடுப்பு எத்தனை நாள், தாயகம் சென்று வர எத்தனைமுறை விமான டிக்கெட் செலவை நிறுவனம் ஏற்கும் என்ற அனைத்தையும் நாம் கேட்டறிய வேண்டும்.

சில நிறுவனங்கள் இந்த தகவல்களை அளிப்பதில்லை என்றபோதும், சரியாக விதிகளை பின்பற்றும் நிறுவனங்கள் இந்த தகவலை தொழிலாளர்கள் கேட்கும் முன்பே அளிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சேவைக் கட்டணம் மற்றும் Renewal கட்டணம்

சில சமயங்களில் நீங்கள் சிங்கப்பூருக்கு வேலைக்கு வரும்போது ஆரம்பத்தில் சேவைக் கட்டணத்தை குறைத்து கேட்கும் ஏஜென்ட்கள், பிறகு உங்கள் Renewalக்கு தனியாக கட்டணம் வசூலிப்பார்கள். வெகு சில இடங்களில் மட்டுமே இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கின்றது.

உண்மையில் Renewalஐ பொறுத்தவரை சிங்கப்பூர் அரசு எந்தவித கட்டணத்தையும் கேட்பதில்லை, சுமார் 300 வெள்ளி செலவில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து Renewal பெறலாம். ஆகையால் நிச்சயம் நீங்கள் பணிக்கு வரும் முன் சேவை கட்டத்தை பற்றி முழுமையாக ஏஜென்ட்டிடம் பேசிக்கொள்வது சிறந்தது.

சொன்ன வேலை கிடைக்குமா?

பல தொழிலாளர்கள், சில சிரமங்களை இந்த கட்டத்தில் தான் அனுபவிக்கின்றனர், காரணம் தமிழகத்தில் அவர்கள் இருந்தபோது ஒரு வேலையை பற்றி கூறி, பின் அவர்கள் சிங்கப்பூர் வந்ததும் வேறு வேலை தரப்படுகின்றன. உண்மையினை கூறவேண்டும் என்றால் அப்படி செய்கின்ற சில நிறுவனங்கள் இன்னும் சிங்கப்பூரில் இருக்கத்தான் செய்கின்றது.

ஆகவே நீங்கள் சிங்கப்பூர் வரும் முன்பு உங்களுக்கு வழங்கப்படவுள்ள வேலை என்ன என்பதை தீர விசாரித்து அதை உறுதிசெய்துகொள்ளுங்கள். நிச்சயம் எல்லா தொழிலாளர்களுக்கு கவனிக்கவேண்டிய விஷயம் இது என்பதை மறக்க வேண்டாம்.

சிங்கப்பூர் River Valley பகுதியில் கும்மாளம்.. Fountainல் “டால்பின்களாக மாறிய நீர்நாய்கள்” – சிங்கை இணையத்தில் வைரலாக வலம்வரும் வீடியோ

வேலை பார்க்கும் நிறுவனத்தின் வரலாறு

எந்த நிறுவனத்தில் நாம் வேலைபார்க்க உள்ளோம் என்பதை தெரிந்துகொள்வது மிகச்சிறந்தது. அந்த நிறுவனம் நம் படிப்புக்கு ஏற்ற நிறுவனம்தானா?, அரசு தரும் விதிகளை முறையாக பின்பற்றும் நிறுவனமா? என்பதை நாம் தீர விசாரிக்கவேண்டும்.

அந்த நிறுவனம் எந்த துறை சார்த்த நிறுவனம், அந்த துறையில் உள்ள பணிக்குத் தான் நாம் அனுப்பப்படுகிறோமா? என்பதை சரிபார்த்துக்கொள்ளவேண்டும். நிச்சயம் இந்த 6 விஷயங்களை நீங்கள் சரியாக ஆலோசித்து உங்கள் வேலையை தேர்ந்தெடுத்தால் நிச்சயம் வெற்றி உங்கள் வசம் வந்துசேரும்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts