TamilSaaga

சிங்கப்பூரில் முதல் பெண் கர்னலாகிறார் இந்தியாவை சேர்ந்த ஷாலினி அருளானந்தம்… பெண்களும் ஆண்களும் சமம் என கருத்து

சிங்கப்பூர் இராணுவ மருத்துவ பயற்சிக் கழகத்தின் (SAF’s Military Medicine Institute) முதல் பெண் கர்னலாக பதவி உயர்வு பெற்றிருக்கிறார் இந்தியாவை சேர்ந்த ஷாலினி அருளானந்தம். 42 வயது பெண்மணியான அவர் இதற்கு முன்பு லெப்டினண்ட் கர்னலாக பணியாற்றி வந்தார்.

ஷாலினி அருளானந்தம் ENT மருத்துவ நிபுணராவார். இவரது கணவர் ஒரு மருத்துவர் (Surgeon) ஆவார் இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளன.

இதற்கு முன்பாக குடிமைத் தற்காப்புப் படைப்பிரிவின் தலைமை மருத்துவ அதிகாரியாகவும் செயல்பட்டு வந்து கொரோனா பேரிடர் காலத்தில் பணியாளர்கள் பாதுகாப்பு திட்டங்களை செயல்படுத்தியதில் மிக முக்கிய பொறுப்பு இவருக்கு உள்ளது.

ஷாலினி அருளானந்தம் அவர்கள் “பல உயர்ந்த பதவிகளை வகிப்பதில் ஆண்களுக்கு பெண்களும் நிகரானவர்கள் தான் எல்லா வாய்ப்புகளை பெண்களும் பெற முடியும். ஒரே பிரச்சனை பெண்கள் தமக்கு தாமே தடைகளை போட்டுக்கொள்கிறார்கள். பல நேரங்களில் ஆண்களை போல பெண்களால் பணி செய்ய முடியுமா? போன்ற சந்தேகங்கள் எழுவது இயல்பு. உயரிய பதவிகளில் வகிக்கும் பெண்களில் நானும் ஒருவர் என்ற முறையில் கூறுகிறேன், என்னோடு உயரிய இடங்களில் பணிபுரியும் அதிகாரிகளில் பெண்கள் அதிகம் இல்லை என்பதை பார்க்கும் போது நம்மால் இந்த வேலையை செய்ய இயலுமா என்ற சந்தேகம் எனக்கு சில சமயங்களில் தோன்றும். இது தான் பெண்களுக்கு பொதுவாகவே இருக்க கூடிய மிகப்பெரிய சாவாலாக பார்க்கிறேன்” என்று கூறியுள்ளார்.

மேலும் “கொரோனா காலகட்ட பணியின் போது உருவான சவால்களில் அதில் உள்ள சிரமங்களை நான் நேரடியாக பார்த்துள்ளேன். என்னுடைய ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ குழு மிகத் தீவிரமாக பணியாற்றினோம். எனது குழுவின் திறன், உழைப்பு மற்றும் துணிச்சல் என்னை மென்மேலும் உக்கப்படுத்துகிறது” என்றும் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் ஆயுத படை மருத்துவ பணியில் 1998ஆம் ஆண்டு சம்பளம் பெற்ற முதல் பெண் என்ற பெருமையும், கடற்படை மனிதவளம், அயலக பொறுப்புகளை வகித்த அனுபவமும் இவருக்கு உள்ளது .

PC : MINDEF

Related posts