TamilSaaga

சிங்கப்பூரில் இளம் பெண் முகத்தில் ஊற்றிய கொதிக்கும் எண்ணெய்.. சிதைந்த முகம் – “மீண்டு வருவேன்” என சபதமெடுத்து வாழ்க்கையை ஜெயித்த அற்புதம்!

உங்கள் முகத்தில் ஒரு பானை அளவுக்கு கொதிக்கும் எண்ணெய் ஊற்றினால் எப்படி இருக்கு கற்பனை செய்து பாருங்கள். சில நிமிடங்களுக்குப் பிறகு அப்படி எண்ணெய் ஊற்றி வெந்துபோன முகத்தோடு கண்ணாடியில் உங்கள் முகத்தை பார்த்தால், அது எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள்.

உங்கள் முகம் முற்றிலும் உருகி, உங்கள் கண்ணின் மேல் இமை வெந்து தொங்கி இருப்பது போன்று பார்ப்பதை கற்பனை செய்து பாருங்கள். நோய்த்தொற்று காரணமாக கொண்டுவரப்பட்ட லாக்டவுனுக்கு நடுவில், இப்படி ஒரு சம்பவம் உங்களுக்கு நிகழ்கிறது என்று கற்பனை செய்து பாருங்கள்.

நம்மில் பலரால் மேலே குறிப்பிட்ட இந்த சம்பவங்களை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. ஆனால், இவை அனைத்தும் உண்மை. அதை அனுபவித்தது “சார்லின் செவ்” நமது சிங்கப்பூர் பெண்.

கடந்த அக்டோபர் 2020 இல் சார்லின் செவ் அனுபவித்தது இப்படியொரு நரக வேதனையைத் தான். மெல்போர்னில் சுமார் ஏழு வருடங்களாக வசித்து வந்த செவ், ஒருநாள் சமையலறையில் நின்று கொண்டிருந்த போது, சூடான எண்ணெய் பானை வெடித்ததில், அவரது முகம் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவுக்கு குரூரமாக சிதைந்து போனது.

மேலும் படிக்க – இறந்தது வங்கதேச ஊழியர் என்றாலும்.. போனது உயிர் தானே… வேலைப்பார்த்த இடத்திற்கு அருகிலேயே மிதந்த உடல் – வெளிநாட்டு ஊழியர்கள் கண்ணீர் அஞ்சலி!

அதன் பிறகு அவர் தற்போது மீண்டு வந்திருக்கிறார். இதுகுறித்து அவர் CNA-விடம் எக்ஸ்க்ளூசிவ்-வாக தனது வேதனைகளை பகிர்ந்துள்ளார்.

“நான் இப்போது அதைப் பற்றி நினைத்தாலும், மனம் பதறுகிறது. அந்த நொடி நான் ஒரு பந்து போல சுருண்டு, ஆம்புலன்ஸை அழைக்க கத்தியது இப்போதும் நினைவிருக்கிறது.

“நான் கண்ணாடியில் சென்று பார்த்த போது, என் தோல் பழுப்பு நிறமாக மாறியது. என் கண்கள் வீங்கின. என் கண் இமை சிதைந்துவிட்டது என்று அந்த நேரத்தில் நான் நம்பினேன். எனது தோல் ‘உருகியதால்’ நான் வாழ்க்கை அத்தோடு முடிந்துவிட்டதாக உணர்ந்தேன்.

அதன் பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, நான் அனுபவித்த இன்னல்கள் என் எதிரிக்கும் வரக்கூடாது. அப்போது தான் “skin grafts” எனும் மாற்று தோல் பொருத்துதல் எனும் முடிவுக்கு மருத்துவர்கள் வந்தனர். என்னிடம் முடிவு கேட்டனர்.. நநான் என்ன சொல்ல முடியும்? வேறொரு தோலை என் முகத்தில் ஏற்க வேண்டும். நினைத்துப் பாருங்கள் அந்த மனவேதனையை.

ஆனால், என் தந்தை “மருத்துவர்களை நம்பு” என்று கூறினார். ஒப்புக்கொண்டேன். ஆனால், உண்மையில் அந்த சிகிச்சை எனக்கு மறுவாழ்வே அளித்திருப்பதைப் போல தற்போது உணருகிறேன். இப்போதும் வெளியே சென்றால், முகத்தை முழுவதுமாக மறைக்கும் மாஸ்க் அணிந்து தான் செல்கிறேன். என்றாவது ஒருநாள், முழு சுதந்திரம் பெறுவேன் என்று நம்புகிறேன்.

என் நிலைமை என் எதிரிக்கும் வரக்கூடாது!” என்றார்.

NOTE: வாசகர்கள் பார்க்க முடியாத அளவுக்கு ரத்தம் படிந்த முகம், மாற்றியமைக்கப்பட்ட தலை தோல், என்று உங்கள் மனதை பாதிக்கும் அளவிலான தகவலும், புகைப்படங்களும் இருந்ததால் இத்தோடு இக்கட்டுரையை நிறைவு செய்கிறோம்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts