TamilSaaga

ஒரு “தாய்” இப்படி செய்யலாமா? : “Autism” பாதிப்புள்ள குழந்தைக்கு நேர்ந்த கொடுமை – “முதல்வர் மீது குற்றச்சாட்டு”

சிங்கப்பூர் நாட்டை சேர்ந்த, மலேசியாவில் பணிசெய்யும் சிங்கப்பூர் பெண் ஒருவர் இன்று புதன்கிழமை (அக்டோபர் 13) “ஆட்டிசம்” பாதிப்பு உள்ள சிறுவனை துன்புறுத்தியதற்காகவும் அதிக நாட்கள் தங்கியதற்காகவும் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளார். சிலாங்கூரில் உள்ள மைக்கிட்ஸ் பராமரிப்பு மையத்தின் முதல்வரான 51 வயது ஷரிஃபா மஸ்லான் 6 வயது சிறுவனை துன்புறுத்தியதற்காக குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.

இந்த குழந்தை பராமரிப்பு நிலயமானது சிறப்புத் தேவைகளைக் கொண்ட குழந்தைகளின் மீது கவனம் செலுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த சம்பவம் நடந்தபோது 7 ஆட்டிசம் கொண்ட பிள்ளைகள் அங்கு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அந்த நிறுவனத்தின் இணையம் அளிக்கின்ற தகவலின்படி குற்றம்சாட்டப்பட்ட ஷரீஃபாவுக்கு 16 வருட கற்பித்தல் அனுபவம் இருப்பதாக தெரிகின்றது. இந்நிலையில் கடந்த அக்டோபர் 3ம் தேதி அந்த நிறுவனத்திற்கு சென்ற அந்த பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை ஷெரீபா தனது மகனை காயப்படுத்தியதாக குற்றம் சாட்டினார்.

மேலும் அந்த நபர் தனது மகனுக்கு அந்த பண்மணியால் இரத்த காயங்களின் புகைப்படங்களை பேஸ்புக்கில் வெளியிட்டார். கூடுதலாக குழந்தை பராமரிப்பு மையத்தின் பாதுகாப்பு கேமராக்களில் இருந்து எடுக்கப்பட்டதாக கூறப்படும் குறிப்பிட்ட அந்த சம்பவத்தின் 47 வினாடி வீடியோ ஒன்றையும் அவர் முகநூலில் பதிவேற்றினார். அந்த வீடியோவில் அந்த பெண் அச்சிறுவனுக்கு கட்டாயப்படுத்தி உணவளிக்க முயலும்போது அந்த சிறுவன் ஓட முயற்சிக்கிறான். ஆனால் அந்த பெண் அவனை சட்டையை பிடித்து தூக்கி, அருகில் இருந்த நாற்காலியில் தள்ளிவிட அந்த பையன் முன்னால் ஒரு மேசையின் மேல் விழுந்துள்ளான்.

இதனையடுத்து வீடியோவில் இருந்த பெண் அவர்தான் என்று நிரூபணமான பட்சத்தில் கடந்த அக்டோபர் 3ம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். மலேசிய ஊடகங்கள் இன்று புதன்கிழமை நீதிமன்றத்தில் இருந்து கிடைப்பெற்ற தகவலின் அடிப்படையில், ஷெரீபா மூன்று குழந்தைகளின் தாய் என்றும் அவருக்கும் இரண்டு ஆட்டிசம் பாதிப்புள்ள குழந்தைகள் இருப்பதாகவும் தெரிவந்துள்ளது. இரண்டு குற்றச்சாட்டுகளுக்காக அப்பெண்ணுக்கு மொத்தம் RM18,000க்கு (5,850 வெள்ளி) ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் டிசம்பர் 9ம் தேதி நீதிமன்றத்தில் அவர் மீண்டும் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மலேசியா சட்டப்படி குழந்தையை துன்புறுத்திய குற்றத்திற்காக, ஷரீபாவுக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

உரிய ஆவணம் இன்றி மலேசியாவில் அதிககாலம் தங்கியிருப்பவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம், மேலும் RM10,000 (3,250 வெள்ளி) வரை அபராதம் விதிக்கப்படலாம். மேலும் 6 பிரம்படி வரை அளிக்கப்படலாம்.

Related posts