TamilSaaga

ஷப்பா என்னா வெயிலு! சிங்கப்பூரில் அதிகரித்து வரும் வெப்பநிலை! வெயிலில் வேலை செய்பவர்கள் கவனத்திற்கு!

பல நாடுகளுக்கு இது குளிர்காலம். இன்னும் பல நாடுகளில் வெப்பநிலை 0 டிகிரி செல்ஸியஸ்-ஐ விட குறைத்துக்கொண்டு வருகிறது. ஆனால் வெப்பமண்டலப் பகுதியான சிங்கப்பூரில் 35 டிகிரி-யைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது.

நாடு முழுவதும் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமான வெப்பநிலை நிலவி வருகிறது. பெரும்பான்மையான பகுதிகளில் 34 டிகிரி செல்ஸியஸ்-க்கு மேல் இருப்பதால் பொது மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

சிங்கப்பூர் இயல்பாகவே வெப்பமண்டல நாடு என்பதால் அங்கு வெப்பநிலை அதிகமாகத்தான் இருக்கும். கோடையில் சொல்லவே தேவை இல்லை. இருப்பினும் அந்த நாட்டின் மிக வலிமையான கட்டமைப்பு வசதிகளால் அங்கு உள்ள அனைத்து  இடங்களிலும் குளிர்சாதன வசதிகள் கடுமையாக அமைக்கப்பட்டிருக்கும்.

ஆனால் வெளியே செல்லும் பொழுது அனைவரும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

கடந்தவாரம் பதிவான வெப்பநிலைப்படி, Paya Lebar-ல் தான், இதுவரையில்  டிசம்பர் மாதத்தில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த அறிக்கை NEA- The National Environment Agency-ன் அதிகாரபூர்வ FaceBook தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

இதற்கு முன் 2016-ல் தான் அதிகபட்ச வெப்பநிலை பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுவும் 35.9 டிகிரி செல்சியஸ் தான். ஆனால் தற்பொழுது 36.2 டிகிரி பதிவாகியுள்ளது.

ஆகவே பொதுமக்கள் மற்றும் சிங்கப்பூரில் வாழும் நம் சொந்தங்கள் அனைவரும் தக்க பாதுகாப்புடன் இருக்க வேண்டியது அவசியம். வெப்பநிலை நாளுக்கு நாள் மாறிக்கொண்டே தான் இருக்கும் 31 முதல் 36 வரை பாரபட்சம் பார்க்காமல் தகிப்பதால், முறையான பாதுகாப்பு நடைமுறைகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டும்.

கடும் வெயிலில் கட்டிட வேலை, பராமரிப்பு வேலை போன்றவற்றைச் செய்யும் தொழிலாளர்கள் தங்கள் ஆரோக்யத்தைக் கருத்தில் கொள்ள வேண்டும். இந்தியாவில் இருந்து வந்து சிங்கப்பூரில் வேலை பார்ப்பவர்களுக்கு மாறி வரும் வெப்பநிலை காரணமாக உடல் உபாதைகள் ஏற்படலாம்.

உடலில் நீர்பற்றாக்குறை, உடல் உஷ்ணம் அதிகரிப்பு, உடல் சோர்வு, தலை சுற்றல் போன்றவை வெப்பநிலை மாற்றத்தால் ஏற்படலாம். இந்திய காலநிலைக்கும் சிங்கப்பூரின் காலநிலைக்கும் வேறுபாடு இருப்பதால் புதிதாக சிங்கப்பூர் வந்தவர்களுக்கு சாதாரணமாகவே இந்த உபாதைகள் ஏற்படலாம். அதிகரித்து வரும் வெப்பநிலையும் அதனை மேலும் மோசமாக்கும். எனவே அதற்குத் தகுந்தவாறு உடல் ஆரோக்கியத்தை காத்துக் கொள்வது மிகவும் முக்கியம்.

முதலில் உடலுக்கு போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.  அவ்வப்பொழுது உடல் சூட்டைத் தணிக்க இளநீர், ஜூஸ் போன்ற இயற்க்கை பானங்களை எடுத்துக் கொள்ளலாம். உடல் உஷ்ணத்தைத் தூண்டும் உணவுப் பொருட்களை தவிர்ப்பது நல்லது அல்லது அவ்வப்பொழுது எடுத்துக் கொள்ளலாம்.

வெளியில் செல்லும்பொழுது தண்ணீர் பாட்டிலை மறக்காமல் எடுத்துச் செல்ல வேண்டும். மேலும் குடை கொண்டு செல்வது மிகவும் நல்லது. குழந்தைகள் வைத்திருப்பவர்கள் அதற்கான பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றவும்.

இது போன்ற வெப்பநிலை அதிகமாக இருக்கும் காலலங்களில், அதற்கு ஏற்றவாறு இலகுவான உடைகள் அணிவது நல்லது.

வெயிலில் வேலை பார்க்கும் சொந்தங்கள் உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்வது மிகவும் முக்கியம். சிங்கப்பூருக்கு புதிதாக வருபவர்கள் அல்லது சுற்றுலா செல்பவர்கள் இந்தக் காரியங்களைக் கருத்தில் கொண்டு தக்க முன்னேற்பாடுகளுடன் செல்லவும்.

ஒருவேளை சிங்கப்பூருக்கு நீங்கள் புதிதாக வருபவராக இருந்தால், இந்த நாட்டின் புவியியல் மற்றும் காலநிலை குறித்து அறிந்து கொள்வது அவசியம். நமது தமிழ் சாகா பக்கத்தில் சிங்கப்பூர் பற்றிய முக்கியத் தகவல்கள் குறித்து ஒரு பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அது உங்களுக்கு உதவியாக இருக்கும். படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

சிங்கப்பூரில் அன்றாடம் நிகழும் புதுப்புது செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து தமிழ் சாகா சிங்கப்பூர் பக்கத்தில் இணைந்திடுங்கள்!

Related posts