TamilSaaga

“சிங்கப்பூரில் உள்ளூர், நடுத்தர நிறுவனங்களுக்காக புதிய முதலீட்டு திட்டம்” : அசத்தலாக அறிவித்த “Temasek”

சிங்கப்பூர் முதலீட்டு நிறுவனமான Temasek நிறுவனம் 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதல் 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள ஒரு புதிய முதலீட்டை திட்டத்தை உள்ளூர் நிறுவனங்களை இலக்காகக் கொண்டு செயல்படுத்தவுள்ளது. சிங்கப்பூரில் வேகமாக வளர்ந்து வரும் நிறுவனங்களில் முதலீடுகளை அதிகரிக்க இது சிறந்த திட்டமாக திகழும் என்று கருதப்படுகிறது. இந்நிர்வாகத்தின் கீழ் 4.5 பில்லியன் நிதியுடன், 65 ஈக்விட்டி பார்ட்னர்கள் முக்கியமாக பிராந்திய அல்லது உலகளாவிய அளவில் நிறுவப்பட்ட நிறுவனங்களில் பங்கு முதலீடுகளைச் செய்வார்கள்.

Temasek ஆனது பல்வேறு வாய்ப்புகளில் முதலீடு செய்வதற்கான முழு நெகிழ்வுத்தன்மையைக் கொண்டிருந்தாலும், நாங்கள் 65 ஈக்விட்டி பார்ட்னர்களை ஒரு பிரத்யேக தளமாக உருவாக்கியுள்ளோம், குறிப்பாக சர்வதேச அளவில் விரிவுபடுத்த விரும்பும் அதிக திறன் கொண்ட வணிகங்களுக்கு இது உதவும் என்று, திமாசெக் இன்டர்நேஷனல் தலைவர் திரு லீ தெங் கியாட் கூறினார். .

நுகர்வோர், தொழில்துறை மற்றும் வணிக சேவைகள், தளவாடங்கள், சுகாதாரம் மற்றும் தொழில்நுட்பம் போன்ற “வலுவான கட்டமைப்பு” கொண்ட தொழில்களில் இந்த தளம் முதலீடு செய்யும் என்று Temasek நிறுவனம் தெரிவித்துள்ளது. டெமாசெக் இன்டர்நேஷனலின் தலைவரான CEO திரு. டான் சோங் லீ தலைமையிலான முதலீட்டு நிபுணர்களின் முக்கிய குழுவால் இந்த துணை நிறுவனம் நிர்வகிக்கப்படுகிறது.

சிங்கப்பூரில், சிங்கப்பூரை மையமாகக் கொண்ட பிற நிதிகளுடன் நெருக்கமாகப் பணியாற்றவும் திட்டமிட்டப்பட்டுள்ளது. ஹெலிகோனியா கேபிடல் மேனேஜ்மென்ட், டவர் கேபிடல் ஆசியா மற்றும் நோவோ டெல்லஸ் கேபிடல் பார்ட்னர்ஸ் ஆகியவை இதில் அடங்கும்.

Related posts