TamilSaaga

சிங்கப்பூரில் தளர்த்தப்படும் கட்டுப்பாடுகள் ; சுற்றுலா மீது திரும்பும் நாட்டம்

சிங்கப்பூரில் கடந்த ஜூலை 14ம் தேதி முதல் முதற்கட்ட கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அன்று முதல் சமூக ஒன்றுகூடல்களில் 5 பேரை வரை மக்கள் கூடலாம் என்று அரசு அறிவித்தது. மேலும் ஒரு நாளைக்கு இரண்டு முறை ஒன்றுகூடல் நிகழலாம் என்றும் அரசு அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து கூடுதலாக பல தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றது.

வரும் 21ம் தேதி முதல் மேலும் பல தளர்வுகள் சிங்கப்பூரில் அமலுக்கு வரவுள்ளது. குறிப்பாக உணவுக்கூடங்களில் குறைந்த அளவிலான எண்ணிக்கையில் மக்கள் அங்கேயே அமர்ந்து உணவு உண்ணலாம் என்று அரசு அறிவித்துள்ளது. ஆனால் தொற்றின் அளவை பொறுத்தே தளர்வுகளை வழங்கவுள்ளதாக சிங்கப்பூர் அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

சுற்றுலா மீது திரும்பும் நாட்டம்.

இந்நிலையில் சிங்கப்பூரில் மீண்டும் இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில், சுற்றுலா சார்ந்த விஷயங்கள் சூடுபிடிக்க தொடங்கியுள்ளன. ஹோட்டல்கள் மற்றும் சுற்றுலா தளங்களில் முன்பதிவுகள் கணிசமான அளவில் நடந்துவருவதாக தகவல் வெளியாகி வருகின்றது. பல நாட்கள் வீட்டில் அடைந்திருந்த நிலையில் தற்போது மக்கள் சுற்றுலா மற்றும் இதர விஷயங்களில் தங்களுடைய கவனத்தை திருப்பி வருகின்றனர்.

அதே சமயம் பெரும்பாலான மக்கள் முன்னெச்சிரிக்கையாக, நிலைமை முழுமையாக சரியாக காத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts