சிங்கப்பூரில் விலைவாசி உயர்வு என்பது மாதத்திற்கு மாதம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் சிங்கப்பூரில் வாழும் மக்களுக்கு மற்றும் ஒரு விலை உயர்வாக டாக்ஸி கட்டணம் அதிகரித்துள்ளது. வருகின்ற 2024 ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் ஜிஎஸ்டி வரி அதிகரிக்கப்படும் என அரசு ஏற்கனவே அதிகரித்து இருந்தது. இந்நிலையில் அதிகரித்து வரும் எண்ணெய் விலை மற்றும் விலைவாசி உயர்வை சமாளிக்கும் வகையில் டாக்ஸி கட்டணம் உயரக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் தற்பொழுது இயங்கி வரும் லிமோசின் எனப்படும் சொகுசு டாக்ஸிகளை தவிர மற்ற சாதாரண டாக்ஸிகளின் கட்டணம் உயருமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் டாக்சிகளுக்கான ஆரம்ப கட்டணமானது சிங்கப்பூர் டாலர் மதிப்பிற்கு 50 காசுகள் உயரும் எனவும், தூர அடிப்படையிலான கட்டணம் மற்றும் காத்திருப்பு கட்டணம் ஆகியவை ஒரு காசு உயர்ந்து 0.26 என்ன நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் பீக் ஹவர்ஸ் எனப்படும் உச்ச நேரம் அல்லாத மற்ற நேரங்களுக்கான சராசரி கட்டணம் 6.8% அதிகரித்து 13.80 டாலரில் இருந்து அதிகரித்து 14.74 டாலராக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டண உயர்வானது டிசம்பர் 13 முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டாக்ஸிகளுக்கான கணக்கிடப்படும் பீக் ஹவர்ஸ் இதுவரை மாலை 6 மணியிலிருந்து மதியம் 12 மணி வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது .இந்த நேரம் ஆனது ஒரு மணி நேரமாக நீட்டிக்கப்பட்டு மாலை 5 மணியிலிருந்து இரவு 12 மணி வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த நேரத்தில் டாக்ஸி புக் செய்யும் பொழுது பீக் ஹவர் எனப்படும் நேரத்திற்கு நிர்ணயிக்கப்படும் கடினமான வசூலிக்கப்படும். மேலும் சனி, ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பீக் ஹவர்ஸ் கணக்கிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.