TamilSaaga

அதிபர் மாளிகைக்கு சென்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்து தீபாவளியை கொண்டாடிய தமிழக ஊழியர்கள்!

தீபாவளி என்று இந்தியர்கள் எந்தெந்த இடங்கள் வாழ்கின்றனரோ அங்கு எல்லாம் தீபாவளி கொண்டாட்டங்கள் சிறப்பாக நிகழ்ந்தன. சிங்கப்பூரும் அதற்கு சளைத்தது அல்ல. சிங்கப்பூரில் வாழும் தொழிலாளர்கள் ஒவ்வொரு விதத்தில் தீபாவளி கொண்டாடி முடித்தனர். சிலர் அலுவலகத்தில் தங்கள் வேலை பார்க்கும் நிறுவனங்களில் உள்ள நண்பர்களுடன் ஒரே மாதிரியான டிரஸ் அணிந்து பட்டாசு வெடித்து தீபாவளியை கோலாகலமாக இனிப்புடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

சிங்கப்பூரில் இருக்கும் நான்கு தமிழர்கள் தீபாவளி அன்று அதிபர் மாளிகையை சுற்றி பார்த்து வித்தியாசமாக தீபாவளியை கொண்டாடி முடித்துள்ளனர். அது மட்டும் அல்லாமல் சிங்கப்பூர் அதிபர் திரு தர்மன் சண்முக ரத்தினம் மற்றும் அவரது மனைவியுடன் புகைப்படம் எடுத்து வித்தியாசமாக தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். தீபாவளியன்று அதிபர் மாளிகைக்கு வருகை தரலாம் என சிங்கப்பூர் அதிபர் ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி லிட்டில் இந்தியாவில் உள்ள வணிக நிறுவனத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களான முத்துகிருஷ்ணன், ரவி மற்றும் கட்டுமான துறையில் ஊழியர்களாக வேலை செய்யும் ஹரிஹர பிரியன், கணேஷ் ஆகிய நான்கு பேர் அதிபர் மாளிகைக்கு அவரை சந்திக்கும் விருப்பத்துடன் சென்றுள்ளனர்.

வந்தவர்களை மறுக்காமல் வரவேற்ற அதிபர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் மாளிகையை சுட்டு காட்டினார் இதுவரை வெளியில் மட்டுமே கண்டு களித்த மாளிகையை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததும் ஊழியர்கள் நான்கு பேரும் சந்தோஷமாக சுற்றிப் பார்த்து மகிழ்ந்தனர். இது குறித்து கூறிய அவர்கள் சிங்கப்பூரை பற்றியும் சிங்கப்பூரின் கலாச்சாரத்தை பற்றியும் பலவற்றை பார்த்து தெரிந்து கொண்டதாக கூறினர். மேலும்,இந்த தீபாவளி எங்களுக்கு மறக்க முடியாத தீபாவளியாக அமைந்தது எனவும் கூறினர்.

Related posts