TamilSaaga

சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவில் காணாமல்போன “தமிழக தொழிலாளியின் Work Permit” – ஒன்றிணைந்து கண்டுபிடித்துத்தர முயற்சிப்போம்!

நமது சிங்கப்பூருக்கு வரும் ஒவ்வொரு வெளிநாட்டு தொழிலாளியும் நமது சிங்கப்பூர் மக்களையும் அரசையும் நம்பியே இங்கு வேலை வருகின்றனர். சொந்த நாட்டில் தனது குடும்பத்தின் சுமை குறைக்க அந்த தொழிலாளர்கள் தங்களின் ஆசாபாசங்களை முற்றிலும் ஒதுக்கி வைத்துவிட்டு இங்கு வந்து தனிமையில் வாடி குடும்பத்தின் நலன் ஒன்றே பெரிது என்று மனதில் கொண்டு வாழ்கின்றனர். ஆகவே அத்தகைய தொழிலாளர்களின் இன்னல் தீர்க்க நாமும் முயலவேண்டும்.

சிங்கப்பூரில் கையில் வாளுடன் அனைவரையும் மிரட்டிய நபர் : தடுக்கி விழுந்ததும் “வச்சு செய்த” பொதுமக்கள் – பிரம்படி கிடைக்க வாய்ப்பு

காணாமல் போனதாக வெளியான முகநூல் பதிவு

நேற்று ஒரு முகநூல் பக்கத்தில் வெளியான தகவலின்படி சிங்கப்பூரில் பணிசெய்து வரும் சதிஷ் குமார் என்ற தமிழக தொழிலாளியின் Work Permit லிட்டில் இந்தியா பகுதியில் தொலைந்து விட்டது என்றும், பொதுமக்கள் அந்த பெர்மிட்டை கண்டெடுத்தால் குறிப்பிட்ட அந்த எண்ணிற்கு அழைக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். KATTAKKALAI SATHISKUMAR என்ற அந்த தொழிலாளி Process Sector வழியாக சிங்கப்பூர் வந்து பணி செய்து வருகின்றார்.

“சிங்கப்பூரில் உறவுக்கார பெண் குளிப்பதை பார்க்க Spy Cam” : பொதுஇடங்களிலும் இதே வேலை – தலையில் தட்டி தூக்கிய சிங்கை போலீஸ்

தனது குடும்ப பாரம் போக்க சிங்கப்பூர் வந்தவருக்கு கண்டிப்பாக அந்த Work Permit எவ்வளவு அவசியம் என்பதை நாம் அறிவோம். ஆகவே பொதுமக்கள் அவரது WP எங்காவது பார்த்தால் நிச்சயம் அவர்களுக்கு தகவல் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.விரைவில் தனது பெர்மிட் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கும் அந்த தொழிலாளிக்கு நாமும் உதவி செய்வோம். நம்மால் முடிந்த அளவு இந்த தகவலை பகிர்ந்து முயற்சிப்போம்

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts