சிங்கப்பூரில் எப்போதுமே மற்ற மொழிகளை விட தமிழுக்கு பெரிய மரியாதை இருக்கும். மரியாதை என்பதை விட தமிழ் மீது இங்கிருக்கும் அனைவருக்குமே அலாதி காதல் இருக்கும். அதனால் தான் இங்கு பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் வந்து தைரியமாக வேலை செய்து வருகின்றனர். சொந்த நாட்டில் இருக்கும் அதே உணர்வினை கொடுப்பதால் தான் எப்போதுமே தமிழ் மக்கள் சிங்கப்பூரை விரும்புகிறார்கள்.
அதைப்போன்ற மற்ற மொழிகளை விட தமிழுக்கு இங்கு மிகப்பெரிய மரியாதை கொடுக்கப்படும். அரசாங்கம் கூட தமிழ் மீது எப்போதுமே பெரிய அங்கீகாரத்தினை கொடுத்து இருக்கும். மேலும், தமிழ் மக்களுக்கு தனி ஏரியாவே கொடுக்கப்படுகிறது. அங்கு நுழைந்தால் சிங்கப்பூரில் இருக்கிறோமோ தமிழ்நாடா என்று தெரியாத நிலை தான் உருவாகும்.
இதனை தொடர்ந்து வரும் ஏப்ரல் 1 முதல் சிங்கப்பூரில் தமிழ் மாதம் கொண்டாடப்பட இருக்கிறது. மாதம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியை நடத்தும் தமிழ் மொழி கவுன்சில். இந்த வருடத்தின் தலைப்பாக ‘அழகு’ தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறது. 30 நாட்கள் நடைபெறும் விழாவில் 42 நிகழ்ச்சிகள் நடத்தப்பட இருக்கிறது.
இலக்கிய படைப்புகள், பேச்சு போட்டி, ஓவியப்போட்டி ஆகியவை மைய்ய தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைவரும் கலந்து கொள்ள வரவேற்கப்படுகிறார்கள். மேலும், ஆங்கில மொழி பெயர்ப்பு பயிற்சி மற்றும் செய்தி வடிவத்தில் எழுதும் திறன் ஆகியவை சொல்லித்தர ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஏஜென்ட்டிடம் லட்சங்கள் கொடுக்க பயமா இருக்கா? சிங்கப்பூர் கம்பெனிக்கு நேரடியாக அப்ளே செய்ய முடியுமா? இத படிங்க செம வேலையை பிடிங்க!
நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான தமிழ் மொழி கவுன்சிலின் தலைவர் மனோகரன் சுப்பையா பேசும்ப்போது, எங்கள் உணர்வோடு கலந்துள்ளது தமிழ் மொழி. ஆங்கிலம் என்றுமே அதை ஈடு செய்ய முடியாது. இந்த நிகழ்ச்சிக்காக ஒருங்கிணைப்பார்கள் அனைவரும் மிகவும் ஆர்வமுடன் தயாராகி வருகிறார்கள். எங்களால் முடிந்த விஷயங்களை கொண்டு சிங்கை நாட்டில் தமிழை வளர்த்து வருகிறோம் எனக் கூறினார். ஆங்கிலம், மாண்டரின், மலாய் ஆகிய மொழிகளுடன் தமிழும் சிங்கப்பூரில் அதிகாரப்பூர்வ மொழியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.