TamilSaaga

‘Trace Together’ செயலியை அதிகம் பயன்படுத்துங்கள் – அமைச்சர் ஓங் வேண்டுகோள்

சிங்கப்பூரில் Trace Together செயலியில் இருந்து பலர் விலகுவதால், கிருமி தொற்று உறுதியானவர்களிடம் அதிக அளவில் நெருக்கமாக இருந்தவர்களை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்படுவதாக சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் தெரிவித்துள்ளார்.

இந்த செயல் நாட்டில் மீண்டும் கிருமி பரவளின் அளவை மீண்டும் அதிகரிக்கும் என்று அமைச்சர் எச்சரித்துள்ளார். Trace Together மற்றும் Safe Entry போன்ற செயலிகள் கிருமி தொற்று உறுதியானவர்கள் மற்றும் அவர்களுடன் நெருக்கமாக இருப்பவர்களை குறித்து மிகச்சரியான தகவலை கொடுத்ததாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில் இந்த விஷயத்தை எப்படி சமாளிப்பது என்று நேற்று நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சர் ஓங் பதிலளித்தார்.

மக்கள் மீண்டும் Trace Together செயலியை அதிக அளவில் பயன்படுத்தினால் மட்டுமே இந்த பிரச்சனையில் இருந்து நம்மால் முழுமையாக விடுபட முடியும் என்றார் அவர்.

Related posts