TamilSaaga

சிங்கப்பூர் Pipit சாலையில் நடந்த கத்திக்குத்து : தப்பிச்சென்ற 68 வயது முதியவர் – விரைந்து செயல்பட்ட போலீஸ்

சிங்கப்பூரில் ஆபத்தான ஆயுதத்தால் தானாக முன்வந்து ஒருவரை காயப்படுத்திய வழக்கில் 68 வயது முதியவர் கைது செய்யப்பட்டதாக சிங்கப்பூர் போலீசார் கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 24) வெளியிட்ட ஊடக அறிவிப்பில் தெரிவித்தனர். சிங்கப்பூரின் மேக்பெர்சனில் உள்ள பிளாக் 90 பிபிட் சாலையில் கடந்த சனிக்கிழமை இரவு 11 மணியளவில் உதவி கேட்டு போலீசாருக்கு அழைப்பு வந்தது. இதனையடுத்து போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தபோது, ​​51 வயதுடைய நபர் ஒரு குடியிருப்பு பிரிவில் அவரது உடலில் வெட்டுக்காயங்கள் மற்றும் கத்தியால் குத்தப்பட்ட காயங்களுடன் காணப்பட்டார். மேலும் காயமடைந்த மற்றொரு பாதிக்கப்பட்ட 42 வயது நபரின் விரலில் வெட்டு காயங்கள் இருந்தாக போலீசார் தெரிவித்தனர். 51 வயதான அந்த நபர் டான் டாக் செங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது சுயநினைவோடு இருந்தார். மேலும் தாக்குதல் நடத்தியவர் பாதிக்கப்பட்டுள்ள அந்த இருவருக்கும் தெரிந்தவர் என்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பே தப்பி ஓடிவிட்டார் என்றும் கூறினார்.

அதன் பிறகு தப்பியோடிய அவர் உடனடியாக கைது செய்யப்பட்டார். ஆபத்தான ஆயுதத்தால் தானாக முன்வந்து காயப்படுத்தியதாக இன்று திங்கள் கிழமை நீதிமன்றத்தில் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது
என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். மேலும் இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகின்றது.

Related posts