சிங்கப்பூரில் கசிவு குழாய் இணைப்பை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட காயங்களால் ஒரு தொழிலாளி மரணமடைந்துள்ளார். இந்த நிகழ்வு தொடர்பாக ஒரு மூத்த கள மேற்பார்வையாளருக்கு இன்று வியாழக்கிழமை (ஆகஸ்ட் 19) அன்று நான்கு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. முகமது நோரெட்சுவான் ஓத்மான் என்ற அந்த 42 வயது அதிகாரி தனது சக ஊழியரின் மரணத்திற்கு காரணமான ஒரு அலட்சியமான செயலை செய்ததாக மனிதவள அமைச்சகம் (MOM) இன்று வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த 2016ம் வருடம் ஜனவரி 1ம் தேதி அன்று, குழாய் பொருத்துபவர் மற்றும் வெல்டர் சின் சீ செங் மற்றும் அவரது சக பணியாளர் ஒரு கப்பலில் உயர் அழுத்த வாயு அமுக்கியின் குழாய் வழியாக கசிவு குழாய் இணைப்பை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் திரு. சின் சி செங் குழாய் இணைப்பிலிருந்து ஒரு “இணைப்பானை” இணைக்கும் போது, இணைப்பு விலகி அவரைத் தாக்கியது. அவர் தலை மற்றும் இடுப்பு பகுதியில் பலத்த காயமடைந்தார் இதனையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் திரு. சின் காயமடைந்த அன்றே உயிரிழந்தார். இதனை தொடர்ந்து நடந்த விசாரணையில், உயர் அழுத்த வாயு அமுக்கியில் சிக்கிய எஞ்சிய அழுத்த வாயு திடீரென வெளியேற்றப்பட்டதால் இந்த சம்பவம் நிகழ்ந்தது தெரியவந்தது. இது கிளம்ப் இணைப்பியை மிகுந்த சக்தியுடன் வெளியேற்றியது என்று MOM தெரிவித்தது.
சரியான பாதுகாப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்தத் தவறியவர்களுக்கு எதிராக MOM தொடர்ந்து அபராதங்களை விதிக்கும் என்றும். இந்த வழக்கிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளுமாறு நாங்கள் முதலாளிகளையும் ஊழியர்களையும் வலியுறுத்துகிறோம் என்றும் MOM தெரிவித்துள்ளது. நாங்கள் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும் மற்றும் எங்கள் தொழிலாளர்களை பாதிப்பில் இருந்து பாதுகாக்க சரியான பாதுகாப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்த வேண்டும்.