சிங்கப்பூரில் அதிக சம்பளம் கொடுக்கும் பாஸ்களில் ஒன்று தான் SPass. இதில் வேலை செய்பவர்களுக்கு மாதம் குறைந்தது $3000 சிங்கப்பூர் டாலர் வரை கொடுக்கப்பட வேண்டும். கிட்டத்தட்ட இது இந்திய மதிப்பில் 1.85 லட்சமாக மதிப்பிடப்படுகிறது. இத்தனை சம்பளம் தரும் பாஸிற்கு அப்ளே செய்து ரிஜெக்ட்டாகி விட்டால் என்ன செய்யலாம். உங்களிடம் இருக்கும் நிறைய குழப்பத்திற்கு இந்த பதிவில் விடை இருக்கிறது படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
வெளிநாட்டு வேலைக்கு செல்ல இருக்கும் உங்களிடம் எதுவும் டிப்ளமோ அல்லது டிகிரி இருந்தால் உங்களால் Spass அப்ளே செய்ய முடியும். சிங்கப்பூர் நிறுவனத்தில் 10 சொந்த நாட்டு ஊழியர்கள் வேலை செய்யும் போது 1 SPass ஊழியரை வேலைக்கு எடுத்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: சிங்கப்பூர் வேலைக்காக ப்ளைட் ஏறும்போதே இருக்கும் ஆசை.. இங்கை செட்டில் ஆகணும் என்பதே… அந்த ஆசை இருந்தால் PR தான்.. எப்படி அப்ளே செய்யலாம்?
இந்த பாஸில் வருபவர்களுக்கு அடிப்படை சம்பளமாக மாதம் 3000 சிங்கப்பூர் டாலர்கள் கொடுக்கப்பட வேண்டும். இது சிங்கை மனிதவளத்துறை குறிப்பிட்டு இருக்கும் அடிப்படை தொகை. ஆனாலும், பல நிறுவனங்கள் இதை சரியாக பின்பற்றாமல் தொடர்ந்து குறைந்த சம்பளத்தினையே கொடுத்து வருகின்றன. இந்த பாஸிலும் உங்களால் OT செய்ய முடியும்.
இந்த பாஸில் நீங்க சிங்கப்பூர் வருபதற்கு ஒரு நல்ல ஏஜென்ட் பிடித்து வேலை பார்க்க சொன்னால் அவர் தன்னுடைய சிங்கப்பூர் தரப்பு ஏஜென்ட்டிடம் உங்களின் தகவல்களை அனுப்பி ஒரு வேலை பார்க்க கூறுவார். இதற்கு ஏஜென்ட் கட்டணமாக தற்போது வரை 4 முதல் 5 லட்சம் வரை செலவுகள் இருக்கும் என்று கூறப்படுகிறது.
SPass-க்கு தேவைப்படும் ஆவணங்கள்:
- அப்ளே செய்பவரின் பாஸ்போர்ட்
- கல்வி சான்றுகள்
- உங்க கல்லூரியின் எல்லா மார்க் ஷீட்கள் உள்ளிட்டவை முக்கிய ஆவணமாக பார்க்கப்படுகிறது.
இந்த சான்றிதழ்களை வைத்து அப்ளே செய்து அது Reject ஆகிவிட்டால் எப்படி மீண்டும் அப்ளே செய்வது.
SPass reject ஆன மூன்று மாதங்களில் மீண்டும் அப்ளே செய்ய வேண்டும். அதிலும் கொடுக்கப்பட்ட காரணங்களை சரி செய்த பின்னரே மீண்டும் அப்ளே செய்ய முடியும். காரணங்களையும் அடுத்து என்ன செய்வது என்பது பற்றிய ஆலோசனையையும் தெரிந்துக்கொள்ள EP ஆன்லைனில் உள்ள நிராகரிப்பு ஆலோசனையைப் பார்க்கலாம்.
இதையும் படிங்க: சொந்த ஊரையே தாண்டாத குடும்பத்தை சிங்கப்பூர் அழைச்சிட்டு வந்தா கெத்து தானா சார்… அப்படி வரணுமுனா இதை செய்யுங்க
SATல் செக் செய்த பின்னர் SPass அப்ளே செய்யலாம். விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த கம்பெனி நிர்வாகம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்ட் மட்டுமே நிராகரிப்பு குறித்து விசாரிக்க முடியும். அவர்கள் மூலம் தான் மீண்டும் அப்ளே செய்யவும் அனுமதிக்கப்படுவார்கள். விண்ணப்பதாரரோ அல்லது வேறு யார் தரப்போ இதை செய்ய முடியாது.
EP ஆன்லைன் மூலம் அப்ளே செய்ய முடியும். அதன்மூலமே, லாகின் செய்து நிலையை தெரிந்து கொள்ள முடியும். 85 சதவீதம் மீண்டும் அப்ளே செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 6 வாரத்தில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டு விடும். அதிகப்படியான மேல்முறையீடு காரணமாக, மேல்முறையீடு விஷயங்களை MOM நேரில் விவாதிக்க முடியாது என்று கூறப்படுகிறது.